மாஸ்க் போடலன்னா… 6 மாதம் ஜெயில்!

 

மாஸ்க் போடலன்னா… 6 மாதம் ஜெயில்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. கொரோனா இரண்டாம் கட்ட அலையில் இருப்பதாக எச்சரித்திருக்கும் சுகாதாரத்துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, பல மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன.

மாஸ்க் போடலன்னா… 6 மாதம் ஜெயில்!

தமிழகத்திலும் மீண்டும் இ-பாஸ் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் இ-பாஸ் கட்டாயமாக பெற வேண்டும் என்றும் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருப்பதால், மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன.

மாஸ்க் போடலன்னா… 6 மாதம் ஜெயில்!

அந்த வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். மாஸ்க் போடவில்லை என்றால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற ஆட்சியரின் உத்தரவு அம்மாவட்ட மக்களை அதிர வைத்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.