10- 100 மில்லி கிராம் தங்கத்தில் 6 முகக்கவசங்களை வடிவமைத்த நகைப் பட்டறைத் தொழிலாளி!

 

10- 100 மில்லி கிராம் தங்கத்தில் 6 முகக்கவசங்களை வடிவமைத்த நகைப் பட்டறைத் தொழிலாளி!

முக கவசம் உயிர் கவசம் என்ற விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் நோக்கில் 10 கிராம் முதல் 100 மி.கிராம் அளவிலான தங்கத்தில் கோவையை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி முககவசங்களை வடிவமைத்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.தங்கத்தில் கிரிக்கெட் பேட், உலக கோப்பை,பல்வேறு அரசியல் தலைவர்களின் சிற்பம் என பல்வேறு சிற்பங்கள் வடிவமைத்து உள்ளார்.

10- 100 மில்லி கிராம் தங்கத்தில் 6 முகக்கவசங்களை வடிவமைத்த நகைப் பட்டறைத் தொழிலாளி!

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி 200 மி.கிராம் தங்கத்தில் ஆறு கவசங்களை உருவாக்கி உள்ளார்.100,40,30,20,10 என மொத்தம் 200 மி.கிராம் தங்கத்தில் இதனை வடிவமைத்து உள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் இதனை செய்ய இரண்டு நாட்கள் ஆனதாகவும் 10 மி.கிராம் முக கவசம் மிக மெல்லியது என தெரிவித்தார்.சிறிய அளவிலான சிற்பம் எனினும் பெரிய அளவில் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புவதாக தெரிவித்த அவர் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.