தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்!

 

தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்!

நம்முடைய தினசரி உணவில் தேங்காய்க்கு முக்கிய இடம் உள்ளது. சட்னி, துவையல், குழம்பு என்று உணவின் சுவையைக் கூட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தேங்காயில் ஏராளமான மருத்துவப் பலன்கள் அடங்கியுள்ளன. அவற்றைக் காண்போம்…

தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்!


1) நார்ச்சத்து நிறைந்தது:
தேங்காயில் செரிமானத்துக்கு ஏற்ற நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. நார்ச்சத்து மிக்க உணவு உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதைத் தடுக்கின்றன. மேலும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது. கழிவுகள் வெளியேற உதவுகின்றன. நார்ச்சத்து மிக்க உணவு கணையத்தில் சுரக்கும் உணவை செரிக்க பயன்படும் நொதிகளின் அதிகத் தேவையைக் குறைக்கிறது. இது போன்ற செயல்பாடுகள் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்!


2) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது
தேங்காய் கணையத்தில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. செல்கள் போதுமான அளவு சர்க்கரையை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் பாதிப்புக்கான வாய்ப்பு குறைகிறது. நாம் உட்கொண்ட உணவு விரைவாக குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவதைத் தூண்டுகிறது.

தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்!


3) முதுமையைத் தாமதப்படுத்துகிறது:
தேங்காயில் உள்ள சைட்டோகினிகன்கள், கினெடின் மற்றும் டிரான்ஸ் ஜீட்டின் ஆகியவை உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும், செல்கள் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால், முதுமை தாமதமாகிறது.

தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்!


4) நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது:
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டை மேம்படுத்தும் உணவாக தேங்காய் உள்ளது. இது மிகச்சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா, தீமை விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் பொருளாக உள்ளது.

தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்!


5) எலும்பு மற்றும் பற்கள் பாதுகாப்பு:
தேங்காய் கால்சியம் மற்றும் மாங்கனிசு தாது உப்புக்களை உடல் கிரகிக்க உதவுகிறது. இவை எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க உதவுகின்றன. தேங்காய் எடுத்துக்கொள்வது ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளத் துணை புரியும். லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (ஒவ்வாமை) பிரச்னை உள்ளவர்களுக்கு தேங்காய் மிகச்சிறந்த மாற்றாக உள்ளது.


6) சிறுநீர் பாதை நோய்த் தொற்றைத் தடுக்கிறது:
இளநீர் மற்றும் தேங்காயில் உள்ள நீரைப் பெருக்கும் வேதிப் பொருள் சிறுநீர் பிரிவை அதிகரிக்கச் செய்து, சிறுநீரக மண்டலம் செயல்படத் துணை செய்கிறது. இதனால், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று போன்ற பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.