தமிழகத்திற்கு வந்தடைந்த 6 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள்!

 

தமிழகத்திற்கு வந்தடைந்த 6 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. முதல் அலையைக் காட்டிலும் அதிவேகமாக பரவும் இரண்டாம் நிலையை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அண்மையில் தகவல்கள் கசிந்தன.

தமிழகத்திற்கு வந்தடைந்த 6 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள்!

20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தமிழக அரசால் கேட்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 1 லட்சம் தடுப்பூசி மட்டுமே அனுப்பியதாக தெரியவந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப கோவக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அதிக அளவு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போதைய சூழலில் இருந்து தமிழகம் மீள உதவுமாறும் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கிடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழகத்திற்கு வந்தடைந்த 6 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள்!

இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 6 லட்சம் தடுப்பூசிகள் வந்திருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுவரை 53.03 கோவிஷீல்டு, 88.82 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் தற்போதைக்கு 4.1 லட்சம் கோவிஷீல்டு, 1.84 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.