“கொரானா டெஸ்ட் எடுப்பவர் போல வந்த கொள்ளையர்கள்” -சுகாதார துறையினர் வேடமணிந்து , வீட்டை சுத்தமாக துடைத்து சென்றனர் … .

“கொரானா டெஸ்ட் எடுப்பவர் போல வந்த கொள்ளையர்கள்” -சுகாதார துறையினர் வேடமணிந்து , வீட்டை சுத்தமாக துடைத்து சென்றனர் … .

கொரானா டெஸ்ட் எடுப்பவர்கள் போல வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ,வீட்டிலுள்ள பணம் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர் .
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு 1 மணிக்கு கோபால் ஷர்மா என்ற 75 வயது முதியவரின் வீட்டிற்கு ஆறு பேர் முகக்கவசம் அணிந்து வந்தனர் .வந்தவர்களை பார்த்து அந்த வீட்டிலுள்ளவர்கள் நீங்கள் யாரென்று கேட்டதற்கு ,தாங்கள் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களென்றும் ,உங்கள் வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் கொரானா டெஸ்ட் எடுக்க வந்திருக்கோமென்று கூறி வீட்டிற்குள் நுழைந்தனர் .

“கொரானா டெஸ்ட் எடுப்பவர் போல வந்த கொள்ளையர்கள்” -சுகாதார துறையினர் வேடமணிந்து , வீட்டை சுத்தமாக துடைத்து சென்றனர் … .
Coronavirus virus outbreak and coronaviruses influenza background as dangerous flu strain cases as a pandemic medical health risk concept with disease cells as a 3D render (Coronavirus virus outbreak and coronaviruses influenza background as dangerous

உடனே சத்தம் கேட்டு வீட்டிலுள்ள பெண்கள் மற்றும் எட்டு மாத குழந்தை அனைவரும் எழுந்து வந்துவிட்டனர் .உடனே கொள்ளையர்களில் ஒருவன் அந்த எட்டு மாத குழந்தையை பறித்து வைத்துக்கொண்டு ,அந்த குழந்தையின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து அனைவரையும் பார்த்து சத்தம் போட்டால் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டினான் .உடனே அனைவரும் அமைதியானதும் ,எல்லோரையும் ஒரு பாத்ரூமுக்குள் போட்டு பூட்டிவிட்டனர் ..பிறகு வீட்டிலுள்ள 1லட்ச ரூபாய் பணம் ,மற்றும் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றனர் .

“கொரானா டெஸ்ட் எடுப்பவர் போல வந்த கொள்ளையர்கள்” -சுகாதார துறையினர் வேடமணிந்து , வீட்டை சுத்தமாக துடைத்து சென்றனர் … .
அவர்கள் போனதும் வீட்டிலுள்ளவர்கள் கத்தி கூச்சல் போட்டதும் ,அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தந்தனர் .விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .