அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா – “மிக மிக மோசமான வாரம்” மனைவி கவலை!

 

அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா – “மிக மிக மோசமான வாரம்” மனைவி கவலை!

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதி தீவிரமாக உள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கொரோனாவின் பிடியில் சிக்குகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் குடும்பத்தில் 10 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா – “மிக மிக மோசமான வாரம்” மனைவி கவலை!

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அவரின் மனைவி பிரீத்தி. அந்த ட்வீட்டில், “ஒரே வாரத்தில் எங்கள் குடும்பத்தில் 6 பெரியவர்களுக்கும் 4 சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. நாங்கள் அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் சிகிச்சையில் இருந்தோம். இந்த வாரம் எங்களுக்கு மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒன்றே கொரோனாவை எதிர்த்துப் போராட உதவும்.

கொரோனா வந்தால் உடலளவில் நாம் சீக்கிரமாக தேறிவிட்டாலும் மனதளவில் சகஜ நிலைக்கு திரும்ப நேரம் எடுக்கிறது. இந்த எட்டு நாட்கள் எனக்கு மிகவும் மோசமாக இருந்தது. உதவி செய்ய அனைவரும் இந்தார்கள். ஆனால் யாரும் நம்முடன் இருக்க முடியாது. கொரோனா மிகக் கடுமையான தனிமைப்படுத்தல் நோயாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியில் விலகினார். கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் குடும்பத்தாருடன் இருப்பது அவசியம் என்பதால் விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.