இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம்! அச்சத்தில் உறைந்த மக்கள்

 

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம்! அச்சத்தில் உறைந்த மக்கள்

இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ராவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

சுமத்ரா தீவில் இன்று காலை 5.23 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்திற்கு ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து அதே பகுதியில் 6 நிமிடங்கள் இடைவெளியில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.திடீரென ஏற்பட்ட நடுக்கத்தினால் மக்கள் பீதியில் வீதியை நோக்கி சிதறி ஓடினர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை தற்போது வரை நிலவி வருகிறது.

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம்! அச்சத்தில் உறைந்த மக்கள்

இந்தோனேசியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு 9.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் 2 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் குறிப்பாக இந்தோனேசியாவிலிருந்து மட்டுமே ஒரு லட்சத்து 77 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயம் அடைந்து உயிருக்கு போராடி வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.