இதுவரை ஊரடங்கு விதியை மீறிய 6.67 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

 

இதுவரை ஊரடங்கு விதியை மீறிய 6.67 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆகஸ்ட் 31 தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் இ-பாஸ் நடைமுறை இந்த மாதமும் தொடருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் மக்கள் மிகவும் கவனாமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்களோ அதனை பொருட்படுத்தாமல் தேவையில்லாத காரணங்களுக்காக சுற்றித் திரிகின்றனர். அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டதன் படி, தமிழக காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதாவது ஊரடங்கு விதியை மீறி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும், அபராதம் விதிக்கப்பட்டும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

இதுவரை ஊரடங்கு விதியை மீறிய 6.67 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

அவ்வாறு வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்ததன் விவரங்களையும், வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரங்களையும் காவல்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமுடக்க விதிகளை மீறியதால் இதுவரை ரூ.19.81 கோடி அபாரதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறிய 6.67 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9.43 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.