6.6 கோடி – இந்தியாவில் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் எண்ணிக்கை

 

6.6 கோடி – இந்தியாவில் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் எண்ணிக்கை

கொரோனா வைரஸ் நோய்ப் பரவலில் அதிகம் பாதிக்கபட்ட நாடுகளில் முதன்மையானது இந்தியா. கடந்த சில வாரங்களாக உலகளவில் புதிய நோயாளிகள் அதிகரிப்பதிலும், அதிக மரணங்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலிலும் முதல் இடத்தில் இந்தியாவே உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 17 லட்சத்து  88 ஆயிரத்து 085 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 34 லட்சத்து 3 ஆயிரத்து 840 நபர்கள்.

6.6 கோடி – இந்தியாவில் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் எண்ணிக்கை

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 75 ஆயிரத்து 551 பேர்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 74,08,694 பேர்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 70,98,291 பேரும், இந்தியாவில் 56,46,010 பேரும், பிரேசில் நாட்டில்  45,95,335 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

6.6 கோடி – இந்தியாவில் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் எண்ணிக்கை

தினசரி 12 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளோடு இந்தியாவின் பரிசோதனைத் திறன் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 6.6 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன.

அதிக அளவிலான பரிசோதனைகளின் மூலம் பாதிப்புகள் விரைவில்  கண்டறியப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தொற்று  விகிதம்  குறையும்  என்று  ஆதாரங்கள் கூறுகின்றன.

6.6 கோடி – இந்தியாவில் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் எண்ணிக்கை

14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்  அதிக பரிசோதனைகளையும்,  குறைவான பாதிப்புகளையும் கொண்டு வருகின்றன. 10 லட்சம் மக்கள்  தொகையில் அதிக நபர்களுக்கு இம்மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்  பரிசோதனை நடத்தும் நிலையில், உறுதியாகும்  தொற்றுகள் தேசிய  சராசரியை விட குறைவாகவே உள்ளன.

உறுதியாகும் தொற்றுகளின் தேசிய சராசரி 8.52 சதவீதமாக இருக்கும்  நிலையில், 10 லட்சம் பேரில் 48,028 நபர்களுக்கு  இன்றைய நிலையில்  பரிசோதனை நடத்தப்படுகிறது.

6.6 கோடி – இந்தியாவில் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் எண்ணிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் 83,347 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.  உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 74 சதவீதம் 10 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளது.