6க்கே விசிக ஒத்துக்கல; 4 க்கு நாங்க தலையாட்டணுமா? கொந்தளிக்கும் மதிமுகவினர்

 

6க்கே விசிக ஒத்துக்கல; 4 க்கு நாங்க தலையாட்டணுமா? கொந்தளிக்கும் மதிமுகவினர்

மல்லைசத்யா உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகளுடன் திமுக நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் இன்று மாலையில் மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதிலும் உடன்பாடு எட்ட வாய்ப்பில்லை என்றே கருதுகின்றனர் மதிமுகவினர்.

6க்கே விசிக ஒத்துக்கல; 4 க்கு நாங்க தலையாட்டணுமா? கொந்தளிக்கும் மதிமுகவினர்

காரணம், இரட்டை இலக்கங்களில் எதிர்பார்த்த வைகோவுக்கு 4 சீட் மட்டுமே தருவதாக சொல்லி இருக்கிறது திமுக. விசிகவுக்கு கூட 6 சீட் தரும் திமுக, மதிமுகவுக்கு அதைவிட குறைவாக கொடுப்பதில் கடுமையான மன உளைச்சலில் வைகோ இருப்பதாக சொல்கிறார்கள் அவரது கட்சியினர்.

ஒரு சீட் கூட தராவிட்டாலும் பரவாயில்லை. திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று வைகோ சொல்லிவிட்டதால், அதையே சாக்காக வைத்துக்கொண்டு, எப்படியும் இறங்கிவந்துவிடுவார் வைகோ என்றே கணக்கு போடுகிறதாம் திமுக. கடைசி நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். திமுகவுக்குதான் என் முழு ஆதரவு என்று வைகோ ஸ்டாலினிடமே சொல்லி இருப்பதாலும், அதையே எல்லா மைக் முன்னாலும் சொல்லி வருவதாலும் 4 சீட்டுக்கு உடன்பாடு கொண்டுவிடுவார் வைகோ என்று உறுதியாக சொல்லி வருகிறது அறிவாலயம்.

6க்கே விசிக ஒத்துக்கல; 4 க்கு நாங்க தலையாட்டணுமா? கொந்தளிக்கும் மதிமுகவினர்

10 தொகுதிகள் கேட்டால் 6 தொகுதிகளிதான் திருவதா? என்று விசிகவினரே முழக்கம் எழுப்பி வருகின்றனர். அப்படி இருக்கையில், தன்னை விட ஜூனியருக்கே இத்தனை சீட் கொடுத்தும் திருப்தியில் இல்லாதபோது, சீனியரான தலைவருக்கு 4 கொடுத்தா எப்படித்தான் திருப்திபடுவார் என்கிறார்கள் வைகோ ஆதரவாளர்கள்.

ஸ்டாலினை எப்படியாவது முதல்வர் ஆக்க வேண்டும் என்றூ தொடர்ந்துசொல்லிக் கொண்டே வரும் வைகோ, ஸ்டாலின் உள்ள அதிக நம்பிக்கையினால், கேட்ட சீட் இல்லாவிட்டாலும் அதிகம் கிடைக்கும் என்றே அதிகம் நம்பிக்கொண்டிருந்திருக்கிறார். அதனால்தான் இந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் மதிமுக சீனியர்கள் சிலர். 6க்கே விசிக ஒத்துக்கல; 4 க்கு நாங்க தலையாட்டணுமா? என்று மதிமுகவின் தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர்.

6க்கே விசிக ஒத்துக்கல; 4 க்கு நாங்க தலையாட்டணுமா? கொந்தளிக்கும் மதிமுகவினர்

இந்நிலையில் திமுக – மதிமுக தொகுதிப்பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு 2ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

என்னை முடிவெடுக்கப்போகிறாரோ வைகோ?