6 ஹீரோ, 6 ஹீரோயின் அசத்தலாக வெளியானது சிம்பு தேவனின் அடுத்த பட அறிவிப்பு!

 

6 ஹீரோ, 6 ஹீரோயின் அசத்தலாக வெளியானது சிம்பு தேவனின் அடுத்த பட அறிவிப்பு!

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ‘கசடதபற’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ‘கசடதபற’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிம்பு தேவன். அப்படம் வெற்றி பெற்றதையடுத்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கிவந்தார்.  ஷங்கர் தயாரிப்பில் உருவாகிய அந்தப் படம் தற்போது பாதியிலேயே நின்றுள்ளது. தயாரிப்பு தரப்புக்கும் வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாகப் படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளது.

இதற்கிடையில் இயக்குநர் சிம்பு தேவன் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியுடன் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘கசடதபற’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நேற்று சூர்யா வெளியிட்டார். 

இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 இசையமைப்பாளர்கள், 6 எடிட்டர்கள் ஒர்க் பண்ணவிருக்கிறார்கள்.மேலும் ஆறு கதைகளைக்கொண்ட ஆன்தாலஜி படமாக இது இருக்குமாம். எல்லாக் கதைகளும் ஒன்றுக்குக்கொன்று கோக்கப்பட்டிருக்கும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் பணியாற்றவுள்ள 6 எடிட்டர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.