6 வயதில் திருமணம், 18 வயதில் விவாகரத்து: இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!

 

6 வயதில் திருமணம், 18 வயதில் விவாகரத்து: இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!

குழந்தை திருமணத்தை எதிர்க்கும் வகையில் 6 வயதில் திருமணம் முடிந்த சிறுமி, 12 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான்: குழந்தை திருமணத்தை எதிர்க்கும் வகையில் 6 வயதில் திருமணம் முடிந்த சிறுமி, 12 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிதாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த பிந்துதேவி என்ற 6 வயது சிறுமிக்கு 12 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கூலித்தொழிலாளியின் மகளான அந்த சிறுமி சரண் நகர் பகுதியில் வசித்து வந்தார்.  தற்போது அந்த சிறுமி 18 வயது நிரம்பி இளம் பெண்ணாகியுள்ள நிலையில்  விவரம் அறியா வயதில் செய்யப்பட்ட திருமணத்திலிருந்து விடுபட நினைத்து ஜோத்பூரில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இதை அப்பெண்ணின் குடும்பத்தார் கடுமையாக எதிர்த்த நிலையில்  பெண்ணிற்கு சாரதி ட்ரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவி செய்துள்ளது. இதன் பின் அப்பெண் தாக்கல் செய்த மனுவின் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி பி.கே.ஜெயின், குழந்தை திருமணம் என்பது கடுமையான குற்றம், அதனால்  இந்த திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிந்துதேவி, ‘குழந்தைத் திருமணம் என்ற பிடியிலிருந்து நான் விடுதலை பெற்றுவிட்டேன். இனி என் கனவுகளை நினைவாக்க என் எண்ணம்போல் படிப்பேன்’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.