6 மாதம் உடற்பயிற்சி, விவாதங்கள், காயங்களுடன் மீண்டும்… எஃப்ஐஆர் குறித்து விஷ்ணு விஷால் ட்வீட்!

 

6 மாதம் உடற்பயிற்சி, விவாதங்கள், காயங்களுடன் மீண்டும்… எஃப்ஐஆர் குறித்து விஷ்ணு விஷால் ட்வீட்!

இப்படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (நவம்பர் 25) தொடங்கியுள்ளது. 

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் திரைப்படம்  ‘எஃப்ஐஆர்’ . இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் 
இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

ttn

இப்படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (நவம்பர் 25) தொடங்கியுள்ளது. 

ttn

இதில் நடிகைகள்  மஞ்சிமா மோகன்,  ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.   சுஜாதா எண்டர்டெயின்மென்ட் சார்பாக ஆனந்த் ஜாய் தயாரிக்கும் இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார். 

இந்நிலையில் இதுகுறித்து  நடிகர் விஷ்ணு விஷால்,  ‘6 மாத ஸ்கிரிப்ட் வாசிப்பு, விவாதங்கள், சில காயங்கள், உடற்பயிற்சி  மற்றும் பல புதிய மாற்றங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பிற்குச் செல்கிறேன். ஒரு சின்ன குழந்தை தனது விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் செல்வதில் உற்சாகமாக இருப்பதைப் போல  உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘எஃப்ஐஆர்’ படம் அடுத்த ஆண்டு கோடைவிடுமுறையில்  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது