6 ஜிபி ரேம் கொண்ட லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

 

6 ஜிபி ரேம் கொண்ட லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

சீனாவில் லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போனில் P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் கோட்டிங் கொண்டுள்ளது. மேலும் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

லெனோவோ இசட்5எஸ் சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே

ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்

– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ZUI 10

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, PDAF, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்

– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4

– 5 எம்.பி. கேமரா, f/2.4

– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

விரல்ரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஆடியோ

வாட்டர் ரெசிஸ்டண்ட் (P2i)

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்.பி. டைப்-சி

– 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போன் ஹனி ஆரஞ்சு, கிரே மற்றும் டைட்டானியம் கிரஸ்டல் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1398 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,410), 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16,475) என்றும் டாப்-என்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1898 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,565) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.