6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது பொருளாதார வளர்ச்சி

 

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது பொருளாதார வளர்ச்சி

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. முந்தைய காலாண்டில் பொருளாதாரத்தில் 5.8 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் நாடாக நம் நாடு உள்ளது. ஆனால் கடந்த சில  காலாண்டுகளாக நம் பொருளாதாரத்தில் மந்த நிலை நிலவுகிறது. 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின்  பொருளாதாரத்தில் 5.8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நம் நாட்டு பொருளாதாரத்தில் 5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது.

தயாரிப்பு துறை

சென்ற காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (பொருளாதாரம்) சரிவு ஏற்படும் என நிபுணர்கள் கணித்து இருந்தனர். ஆனால் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன் 2012-13ம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் பொருளாதாரத்தில் 4.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

தயாரிப்பு துறையில் உற்பத்தி கடுமையாக குறைந்தது, நுகர்வோர் தேவை மற்றும் தனியார் முதலீடு சரிந்தது, சர்வதேச வர்த்தக பிரச்சினையும் இந்தியாவின் வர்த்தகத்தை பாதித்தது. இது போன்ற காரணங்களால்தான் இந்தியாவின் பொருளாதார வளாச்சி கடந்த காலாண்டில் அதள பாதாளத்தில் வீழ்ந்தது. 2018 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 8 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

மந்த கதியில் இருக்கும பொருளாதார வளர்ச்சியை சுறுசுறுப்பாக மத்திய அரசு கடந்த சில வாரங்களாக ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் வரும் காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.