Home க்ரைம் 6 ஆம் வகுப்பு படித்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்.. போக்சோவில் கைது!

6 ஆம் வகுப்பு படித்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்.. போக்சோவில் கைது!

குழந்தைகள் பள்ளிகளிலும், பள்ளி சென்று திரும்பும் போதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.

சமீப காலமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணமான ஆபாசப் படங்களின் தளங்களை முடக்குவதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் சிறார்களின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றும் நபர்களையும் அதிரடியாகக் கைது செய்து வருகிறது. இருப்பினும் குழந்தைகள் பள்ளிகளிலும், பள்ளி சென்று திரும்பும் போதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். இதே போலக் கோவையில் பள்ளி ஆசிரியர் 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

கோவையில் உள்ள அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடராஜன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனைப் பற்றி அந்த சிறுமி பெற்றோர்களிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரின் மீதான குற்றம் உறுதியானதால் ஆசிரியர் நடராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஆசிரியரே மாணவிக்கு பாலியல் கொடுத்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்

பிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி...

மீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்!

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக...

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி! எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது 13 வயது மகளை, வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை...

“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா

திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, வியாபாரிகளுக்கு சாதகமாக வராதபட்சத்தில், தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகர் சங்க பேரமைப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!