6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியை தொடங்கிய சீனா! வெற லெவல்!! 

 

6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியை தொடங்கிய சீனா! வெற லெவல்!! 

சீனா 6ஜி என்னும் ஆறாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளுக்கான தொழில்நுட்பம் குறித்து ஆராயத் தொடங்கியுள்ளது. 

சீனா 6ஜி என்னும் ஆறாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளுக்கான தொழில்நுட்பம் குறித்து ஆராயத் தொடங்கியுள்ளது. 

அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையில் சீனாவில் 5ஜி சேவை தொடங்கி நடைமுறைபடுத்தியுள்ளது. அதன்படி 5ஜி தொழில்நுட்பமானது அந்நாட்டு உற்பத்தி, மருத்துவம் என சகல துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. சீனா டெலிகாம், சீனா மொபைல், சீனா யூனிகாம் மற்றும் சீனா வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றிற்கு, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான உரிமத்தையும் வழங்கியுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் என்பது தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி யின் பதிவிறக்க வேகத்தை விட 10 முதல் 100 மடங்கு அதிவேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

6G

இந்நிலையில் கம்பில்லா தொலைத்தொடர்பு சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில்  6ஜி என்னும் ஆறாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளுக்கான ஆய்வை சீனா தொடங்கியுள்ளது. சீன அரசுக்கு, அந்நாட்டு ஆய்வு நிறுவனங்களும் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்காக மேம்பாட்டுக் குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தை விட 6ஜி குறைந்தது 20 முதல் 200 மடங்கு அதிக வேகமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

6G

இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பமே தடுமாற்றத்திலுள்ள நிலையில் சீனா 6ஜி தொழில்நுட்பத்தில் தடம் பதித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் 5ஜி எனும் ஐந்தாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளைத் தொடங்க அனைத்து நாடுகளும் போட்டிப்போட்டு வருகின்றன. இந்நிலையில் 6ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருமாயின் மிகை மெய்நிகர்த் தொழில்நுட்பம், தானியங்கி வாகனங்கள், ரோபோட் துறை ஆகியவற்றில் முக்கியத்துவம் பெறும் என கூறப்படுகிறது.