6ஜிபி ரேம் கொண்ட விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

6ஜிபி ரேம் கொண்ட விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: விவோ நிறுவனத்தின் வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 6 ஜிபி ரேம் கொண்ட விவோ வி9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதன் அடுத்த வெர்ஷனான வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களாக 6.3 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 6 ஜிபி ரேம், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. செல்ஃபி லைட்டிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

விவோ வி9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்

அட்ரினோ 512 GPU

– 6 ஜிபி ரேம்

– 64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2

– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 16 எம்.பி. செல்ஃபி கேமரா

கைரேகை சென்சார்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி

விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் விவோ வி9 ப்ரோ அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.