6ஜிபி ராம், 128ஜிபி மெமரியுடன் நோக்கியா 8.1 அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

 

6ஜிபி ராம், 128ஜிபி மெமரியுடன் நோக்கியா 8.1 அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்டபோன் மாடல் அடுத்த வாரம் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனடி கேஷ்பேக் வசதி மற்றும் எக்சேஞ்ச் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

1n

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2244 பிக்சல் திர்மானம் மற்றும் 18:7:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

2n
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.
 
சேமிப்பு:

3n

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கேமரா:

4n

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு
மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி:

5n

இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக பிப்ரவரி 18-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3000ரூபாய் மதிப்புள்ள இலவச கிப்ட் மற்றும் கேஷ்பேக் வசதியும்
வழங்குகிறது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
 
விலை:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999.