Home உலகம் 6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியை தொடங்கிய சீனா! வெற லெவல்!! 

6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியை தொடங்கிய சீனா! வெற லெவல்!! 

சீனா 6ஜி என்னும் ஆறாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளுக்கான தொழில்நுட்பம் குறித்து ஆராயத் தொடங்கியுள்ளது. 

சீனா 6ஜி என்னும் ஆறாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளுக்கான தொழில்நுட்பம் குறித்து ஆராயத் தொடங்கியுள்ளது. 

அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையில் சீனாவில் 5ஜி சேவை தொடங்கி நடைமுறைபடுத்தியுள்ளது. அதன்படி 5ஜி தொழில்நுட்பமானது அந்நாட்டு உற்பத்தி, மருத்துவம் என சகல துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. சீனா டெலிகாம், சீனா மொபைல், சீனா யூனிகாம் மற்றும் சீனா வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றிற்கு, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான உரிமத்தையும் வழங்கியுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் என்பது தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி யின் பதிவிறக்க வேகத்தை விட 10 முதல் 100 மடங்கு அதிவேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

6G

இந்நிலையில் கம்பில்லா தொலைத்தொடர்பு சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில்  6ஜி என்னும் ஆறாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளுக்கான ஆய்வை சீனா தொடங்கியுள்ளது. சீன அரசுக்கு, அந்நாட்டு ஆய்வு நிறுவனங்களும் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்காக மேம்பாட்டுக் குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தை விட 6ஜி குறைந்தது 20 முதல் 200 மடங்கு அதிக வேகமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

6G

இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பமே தடுமாற்றத்திலுள்ள நிலையில் சீனா 6ஜி தொழில்நுட்பத்தில் தடம் பதித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் 5ஜி எனும் ஐந்தாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்புச் சேவைகளைத் தொடங்க அனைத்து நாடுகளும் போட்டிப்போட்டு வருகின்றன. இந்நிலையில் 6ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருமாயின் மிகை மெய்நிகர்த் தொழில்நுட்பம், தானியங்கி வாகனங்கள், ரோபோட் துறை ஆகியவற்றில் முக்கியத்துவம் பெறும் என கூறப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

திருவள்ளூர்: பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி விளையாடிய சிறுவன் மூச்சுத்திணறி பலி

திருத்தணி அருகே முகத்தில் பிளாஸ்டிக் பையால் மூடி விளையாடிய 5 வயது சிறுவன், மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பூபாலன்...

இரண்டாம் குத்து படத்தை நான் பார்க்கவில்லை – எஸ்கேப் ஆகும் ’ராக்போர்ட்’ முருகானந்தம்

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் முருகானந்தம், குருதி ஆட்டம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகி தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். தயாரிப்பில் இறங்கிவிட்டாலும், திரைப்பட விநியோகத்தை கைவிடவில்லை. கடந்த...

ஆலை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து: வடமாநில தொழிலாளி பலி!

ஓசூர் அருகே தொழிற்சாலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சிப்காட் 1-ல் தனியார் தொழிற்சாலை...

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் பல சூதாட்டங்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!