5 மாநில தேர்தலையும் ரத்து செய்யக்கோரும் காரணம் இதுதான்!

 

5 மாநில தேர்தலையும் ரத்து செய்யக்கோரும் காரணம் இதுதான்!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்ட தேர்தலாகவும், அசாமில் மூன்று கட்ட தேர்தலாகவும், மத்திய பிரதேசத்தில் 8 கட்ட தேர்தலாகவும் நடத்த இருக்கிறது தேர்தல் ஆணையம்.

5 மாநில தேர்தலையும் ரத்து செய்யக்கோரும் காரணம் இதுதான்!

தேர்தல் என்பதால் ஐந்து மாநிலங்களும் கூட்டணி, தொகுதி பங்கீடு என்று பரபரப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையமும் ஐந்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறது.

தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை உள்ளிட்ட தீவிர நடவடிக்கையில் இருக்கிறார்கள்.

5 மாநில தேர்தலையும் ரத்து செய்யக்கோரும் காரணம் இதுதான்!

இந்நிலையில், ஐந்து மாநில தேர்தலையும் ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவை காலம் முடிவந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும். சட்டப்பேரவை காலம் முடிவடையும் முன்னரே தேர்தல் நடைபெற இருப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.