விண்வெளிக்கு டூர் போன 5 மனிதர்கள்

 

விண்வெளிக்கு டூர் போன 5 மனிதர்கள்

அமெரிக்க தனியார் நிறுவனத்தின் யூனிட்டி 22 விண்கலம் மூலம் 5 பேர் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றனர்.

விண்வெளிக்கு டூர் போன 5 மனிதர்கள்

நியூமெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து யூனிட்டி 22 விண்கலம் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் உட்பட 5 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி ஆவார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் சிரிஷா பாண்ட்லா விண்வெளிக்கு சென்றுள்ளார். வரும் 20 ஆம் தேதி அமேசான் நிறுவனர் பெஸோஸ் விண்வெளிக்கு செல்லவுள்ள நிலையில் அவரை முந்திக்கொண்டு விண்வெளிக்கு பறந்தார் பிரான்சன், கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சை தொடர்ந்து விண்வெளிக்கு செல்லும் 3வது இந்திய பெண் என்ற பெருமையை சிரிஷா பாண்ட்லா பெறுகிறார்.

இரட்டை விமானம் 50,000 அடி உயர இலக்கை அடைந்தவுடன் யூனிட்டி 22 விண்கலம் விடுவிக்கப்படும். யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கியவுடன் விண்வெளிக்குள் நுழையும்.