5 பேருக்கு ஒரு ராணுவ வீரர்; காஷ்மீரை மிஞ்சிவிட்டது தமிழீழம்… கொளத்தூர் மணி

 

5 பேருக்கு ஒரு ராணுவ வீரர்; காஷ்மீரை மிஞ்சிவிட்டது தமிழீழம்… கொளத்தூர் மணி

இலங்கை இறுதி யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை என்ன? என்பது பற்றி ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கவலை தெரிவித்தார். புலியூரில் பொன்னம்மான் நினைவு கூடத்தில் அனுசரிக்கப்பட்ட மாவீரர் தினத்தின் போது அவர் இந்த கவலையை வெளிப்படுத்தினார்.

‘’எந்த லட்சியத்திற்காக இந்த போராட்டத்தை புலிகள் முன்னெடுத்தார்களோ, தங்களது உயிரையே துறக்க முன்வந்தார்களோ அவர்களது நினைவில் மாவீரர் நாள் வீரவணக்கம் செலுத்துகிறோம்’’என்று பேசிய கொளத்தூர் மணி,

5 பேருக்கு ஒரு ராணுவ வீரர்; காஷ்மீரை மிஞ்சிவிட்டது தமிழீழம்… கொளத்தூர் மணி

’’ஈழத்தில் இப்போது 10 லட்சம் தமிழர்கள்தான் இருக்கக்கூடும். மற்றவர்கள் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள். ஆனால், 2 லட்சம் ராணுவத்தினர் அவர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில்தான் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்குமான விகிதம் அதிகம் என்று சொன்னார்கள். அதைவிட அதிகமான விழுக்காடுதான் இன்றைக்கும் நீடித்துக்கொண்டிருக்கிறது.

போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, 5 பேருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற நிலை இருக்கிறது. ஆனாலும் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு நடக்கும் திருவிழாக்களில் ராணுவம்தான் நிற்கின்றது. ஒரு வட்டாட்சியரையோ, எந்த ஒரு அதிகாரியையிடமோ சந்திக்கும் சந்தர்ப்பம் எல்லாம் இல்லை. ராணுவத்திடனரிடம்தான் எந்த மனுவாக இருந்தாலும் கொடுக்க வேண்டும்’’என்று கவலை தெரிவித்தவர்,

5 பேருக்கு ஒரு ராணுவ வீரர்; காஷ்மீரை மிஞ்சிவிட்டது தமிழீழம்… கொளத்தூர் மணி

’’சிறுபான்னையினராக வாழுகின்ற பூர்வகுடி தமிழ்மக்களை அடிமைகளாக நடத்துகின்றார்கள். இனி அரசியல் நகர்வுதான் சரியான தீர்வுதான் சாத்தியமான ஒன்று என்ற நிலையில், அப்படிப்பட்ட அரசியல் நகர்வு நடக்கிறபோது, நம்முடைய கடமையாக நாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கக்கூடிய தேவை இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறேன்.

மாவீரர் நாளை நடத்தக்கூடாது என்று அரசு சொன்னாலும் தமிழீழம் எங்கும் மாவீரர் நாள் நடந்துகொண்டிருக்கிறது.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களூக்குத்தான் முழு சுதந்திரம் உண்டு. அங்கு புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தாலும் புலிகள் இயக்கத்தின் கொடி ஏந்திச்செல்ல தடையில்லை. பிரபாகரன் படத்தை வைத்துக்கொள்வதற்கு தடை இல்லை. அந்த இயக்கத்தின் பெயரால் நிதி சேர்க்க மட்டும்தான் தடை. அந்த தடைகளும் கூட மெல்ல மெல்ல நீங்கி வருகிறது.

புலம்பெயந்தவர்கள்தான், புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த அந்த நாட்டின் சட்டதிட்டப்படி வாழும் இளைஞர்கள்தான் இப்போது ஈழத்திற்கான அரசியல் நகர்வினை முன்னெடுத்து செல்கிறார்கள்.

யாரை அணுக வேண்டும். எந்த கதவை தட்ட வேண்டும் என்பதையும், அரசியல் நகர்வை எப்படி முன் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதையும் அவர்கள் சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்குள்ள வாய்ப்பு என்னவென்றால் அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவான குரலை இங்கிருந்து எழுப்புவதுதான்.

ஈழப்போருக்கு பயிற்சி கொடுத்தோம், மருத்துவ உதவிகள் செய்தோம், அவர்கள் பொருட்கள் வாங்குவதற்கு இங்கிருப்பவர்கள் உதவி செய்தார்கள். அந்த தேவை எதுவும் இப்போது இல்லை. அரசியல் போராட்டத்திற்கு ஆதரவையாவது தெரிவிப்போம்’’ என்று கேட்டுக்கொண்டார்.