Home க்ரைம் பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு 5 வருசம் தலைமறைவாக இருந்த தந்தை சென்னையில் கைது

பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு 5 வருசம் தலைமறைவாக இருந்த தந்தை சென்னையில் கைது

இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவான தந்தையை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு 5 வருசம் தலைமறைவாக இருந்த தந்தை சென்னையில் கைது

மதுரவாயல் அடுத்த எம்.எம்.டிஏ காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த வக்கீல் ரவி, வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினரின் புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இவரது மகள் ஐஸ்வர்ய பிரியதர்ஷினி(13), ஜெய கிருஷ்ண பிரபு(11), ஆகிய 2 பேரும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் ரவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது அப்போதுதான் பிள்ளைகள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு 5 வருசம் தலைமறைவாக இருந்த தந்தை சென்னையில் கைது

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட ரவி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து பிள்ளைகளுடன் இந்த வீட்டில் வசித்து வந்தார். மேலும் வாடகைக்கு இருந்த வீட்டை காலி செய்துவிட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வந்தது. இவரிடம் போதிய பணமும் இல்லாததால் பிள்ளைகளை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வீடும் தன்னைவிட்டு பறிபோகும் நிலை ஏற்பட்டதால் பிள்ளைகள் இருவரையும் கொலை செய்துவிட்டு தற்கொலை போல் இருக்க வேண்டும் என நீளமான துணியை சிலிண்டரில் கட்டிவிட்டு தீவைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். ஆனால் தீ பாதியிலேயே அணைந்துவிட்டது.

பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு 5 வருசம் தலைமறைவாக இருந்த தந்தை சென்னையில் கைது

மின்கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து பிள்ளைகள் இறந்தது போல் இருக்க வேண்டுமென இதுபோல் விட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவியை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போன் நம்பரை வைத்து மண்ணடியில் பதுங்கியிருந்த ரவியை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு 5 வருசம் தலைமறைவாக இருந்த தந்தை சென்னையில் கைது
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மரணம்: பணியின் போது நேர்ந்த விபரீதம்!

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு...

10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளும் மாநில வாரியாக நடத்தப்படும் பொதுத் தேர்வுகளும் ரத்து...

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி – குஷ்பு ட்வீட்!

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த...

எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது ஏன்? – செந்தில் பாலாஜி விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அதிமுக முன்னாள்...
- Advertisment -
TopTamilNews