பிக்பாஸ் -5 : கமலுக்கு பதில் இவரா?

 

பிக்பாஸ் -5 : கமலுக்கு பதில் இவரா?

அண்மையில்தான் பிக்பாஸ் – 4 நிகழ்ச்சி முடிந்தது. அதற்குள் அடுத்த சீசன் பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி 16ம் தேதியுடன் நிறைவடைந்தது பிக்பாஸ் -4 சீசன். ஆனால், சீசன் -5ஐ இந்த ஆண்டு ஜுன் மாதமே தொடங்கவிருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

பிக்பாஸ் -5 : கமலுக்கு பதில் இவரா?

கடந்த ஆண்டும் ஜூன் மாதம் தான் தொடங்கப்பட இருந்தது. கொரோனா காரணமாக அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போடப்பட்டது. இந்த முறையும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு என்று வந்துவிட்டால் தள்ளிப்போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இது ஒருபுரம் இருக்கம் இருக்க, கட்சி, தேர்தல் என்று கமல்ஹாசன் ரொம்ப பிசியாகிவிட்டதால், அவருக்கு வேறொறு நடிகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று தகவல்.

பிக்பாஸ் -2 சீசனில் இருந்தே நடிகர்கள் சூர்யா, சிம்புவின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், ஒவ்வொரு சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை சூர்யாவின் பெயர் அடிபடவில்லை. சிம்புவின் பெயர் மட்டுமே அடிபட்டிருக்கிறது.