Home தமிழகம் திருச்செந்தூரில் 5ஆவது முறையாக அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

திருச்செந்தூரில் 5ஆவது முறையாக அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 78 ஆயிரத்து 174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருச்செந்தூரில் 5ஆவது முறையாக அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில். திருச்செந்தூர் தொகுதிக்கு பெருமையைத் தருவது இது மட்டுமல்லாமல் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலும் உள்ளது. இத்தொகுதியில் விவசாயம் , உப்பு உற்பத்தி முக்கிய தொழிலாக இருக்கின்றன.

திருச்செந்தூரில் 5ஆவது முறையாக அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

நாடார் சமூகம் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில் இஸ்லாமியர்களும் ,மீனவர்களும், பட்டியலினத்தவர்களும் கணிசமாக உள்ளனர். இதர சமூகத்தினரும் பரவலாக இருக்கின்றனர்.

இந்தத் தொகுதி விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள தொகுதி என்பதால் 1952ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விவசாய தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் திருச்செந்தூர் தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 88 ஆயிரத்து 357 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமக தலைவர் சரத்குமார் 62 ஆயிரத்து 356 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

திருச்செந்தூரில் 5ஆவது முறையாக அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் களமிறங்கினார். அதிமுக வேட்பாளராக கே ஆர். எம். ராதாகிருஷ்ணன், அமமுமுக வேட்பாளராக எஸ் வடமலை பாண்டியன், பாமக வேட்பாளராக எம். ஜெயந்தி, நாம்தமிழர் வேட்பாளராக செ.குளோரியான் , ஆகியோர் களமிறங்கினர். இதில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 78 ஆயிரத்து 174 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே. ஆர். எம் ராதாகிருஷ்ணன் 56122 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் குளோரின் 13 ஆயிரத்து 468 வாக்குகளும், அமமுக வேட்பாளர் வடமலை பாண்டியன் 3312 வாக்குகளும், ஜெயந்திக்கும் சமத்துவ மக்கள் கட்சி ஜெயந்தி குமார் 1811 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

திருச்செந்தூரில் 5ஆவது முறையாக அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

அனிதா ராதாகிருஷ்ணன் இந்த முறையும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் இதுவரைக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் 2001 சட்டமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தல் என நான்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதில் அதிமுக சார்பில் இரண்டு முறையும் திமுக சார்பில் இரண்டு முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது முறையாக திமுக சார்பில் போட்டியிட்டு இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பெருமைக்கு உரியவர் ஆகிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூரில் 5ஆவது முறையாக அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews