5,8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்திற்கு நன்றி: நடிகர் தனுஷ் ட்வீட்!

 

5,8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்திற்கு நன்றி: நடிகர் தனுஷ் ட்வீட்!

பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை  அறிவித்தது.  இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்ததையடுத்து  தமிழகத்திலும் பொதுத் தேர்தல் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவந்தது. மேலும் நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை  அறிவித்தது.  இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நேற்று  5, 8ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், “5ஆம் மற்றும்  8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது .இது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்திலிருந்தும் , பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும் .வாழ்த்துக்கள்.. நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ttn

முன்னதாக நடிகர்கள் சூர்யா, விவேக், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.