என்னாது ரமேஷ் கேப்டனா… பாலா நாமினேஷனில் இல்லையா? – பிக்பாஸ் 57-ம் நாள்

 

என்னாது ரமேஷ் கேப்டனா… பாலா நாமினேஷனில் இல்லையா? – பிக்பாஸ் 57-ம் நாள்

கமல் எப்பிசோட்டுகளுக்குப் பிறகு வீட்டில் சில குழுக்கள் உடையும். சில குழுக்களில் புதிய நபர்கள் சேர்வார். எவிக்‌ஷனில் வெளியேறியவர்கள் பற்றிய பேச்சுகள் ஓடும். குறிப்பாக, அடுத்த வார நாமினேஷனுக்கு யார், யார் என்ற பட்டியல் வெளியானதும், அதில் சிலருக்குச் சுணக்கம்… சின்னச் சின்ன சண்டைகள் என இந்த வாரத்தை சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் நாள். அப்படித்தான் ஆரம்பித்ததா.. வாங்க பார்ப்போம்.

பிக்பாஸ் 57- நாள்

என்னாது ரமேஷ் கேப்டனா… பாலா நாமினேஷனில் இல்லையா? – பிக்பாஸ் 57-ம் நாள்

‘பட்டாஸ்’ பாடலை ஒலிக்க விட்டார் தம்பி. சம்யுக்தா போன சோகம் ஷிவானியிடம் இருக்கும் என எதிர்பார்த்தால்… ம்ஹூம்… டான்ஸில் கரைந்து போயிருந்தார். கேபி, ரியோ இருவரும் சேர்ந்து, சோம்ஸின் காதல் அப்டேட் பற்றிக் கலாய்த்துக்கொண்டிருந்தார்கள்.’திரிஷா கூட நான் எப்படா வாழ்ந்தேன்’என்பதாகக் கதறிட்டு இருந்தார் சோம்.

கேப்டன் டாஸ்க் அறிவித்தார் பிக்கி. அதாவது, மேலே ஒரு வலையில் பலவித மூன்று வண்ணங்களில் கூம்பு வடிவத்தில் பாக்ஸ் இருக்கும். அதை நீள கம்பால் தட்டித் தட்டி எடுக்க வேண்டும். ஆளுக்கொரு வண்ணம் கொடுக்கப்பட்டது. மற்றவர் வண்ணத்தை தட்டிவிட்டால் மைனஸ் பாயிண்ட்.

பாலா, ரம்யா, ரமேஷ் ஆட, ஒவ்வொருவருக்கும் கண்காணிப்பாளராக ஒவ்வொருவரை நியமித்தார் ரியோ. பாலாவைக் கண்காணித்தது ஆரி. அதனால், சின்ன வாக்குவாதம் ஏற்பட்டது. ரியோ எதையோ சொல்லி சமாளித்து ரமேஷ் வென்றதாக அறிவித்தார். இந்த வார கேப்டன் ஜித்தன் ரமேஷ்.

என்னாது ரமேஷ் கேப்டனா… பாலா நாமினேஷனில் இல்லையா? – பிக்பாஸ் 57-ம் நாள்

’ரியோ ஒண்ணும் பண்ணல… இந்த ஆரிதான் மாத்தி மாத்தி பேசறார்’ என ஷனமிடம் அணத்திட்டு இருந்தார் பாலா. ‘கரெக்ட்’னு ஷனமும் கொஞ்சம் மூட்டி விட்டுட்டு இருந்தார்.

கேப்டன் ரமேஷ் (ஆஹான்…) டீம்கள் பிரித்தார். பாத்ரூம் கிளினிங்குக்கு ஒரே ஆள்தான் என்றார். ரம்யா விரும்பி கேட்டு வாங்கிகொண்டார். மற்ற அணிகள் பிரித்து துணை கேப்டன் பாலா என்றதும், ‘நான்தான் அதிகமாக தூங்குவேன். நானே என்னை எப்படி எழுப்பிக்கிறதுனு புது காரணத்தைச் சொல்லி மறுத்தார். அதனால் துணை கேப்டனானது நிஷா.

ஷிவானியிடம் ஆரியைப் பற்றி அணத்திட்டு இருந்தார் பாலா. ரமேஷ் எப்படி ஒரே ஒரு மைனஸ் போடுவார்… எப்படிச் சாத்தியம்… எனக் கேட்ட பாலாவுக்கு, ஆமா, அவர் ஒண்ணுதான் மைனஸ் போட்டார்… நானே சாட்சி என்றதும் ஆஃப் ஆனார் பாலா.

என்னாது ரமேஷ் கேப்டனா… பாலா நாமினேஷனில் இல்லையா? – பிக்பாஸ் 57-ம் நாள்

எதிர்பார்த்ததுபோல எவிக்‌ஷனுக்கு நாமினேஷன். ஷிவானியை நாமினேட் செய்தவர்கள் அர்ச்சனா, அனிதா, ஆஜித், நிஷா, ஆரி, கேபி.

ஆஜித்தை நாமினெட் செய்தது ரம்யா, ஷனம், ஆரி, அனிதா. ஆரியை நாமினேட் செய்தது பாலா, ஷிவானி, ரம்யா, ஆஜித். ரம்யாவை நாமினேட் செய்தது நிஷா, ரமேஷ், ரியோ. ஷனமை நாமினேட் செய்தது அர்ச்சனா, சோம். நிஷாவை நாமினேட் செய்தது ரமேஷ், பாலா.  அனிதாவை நாமினேட் செயதது ரியோ, கேபி. கேபியை ஷனமும், பாலாவை சோமும், ரியோவை ஷிவானியும் நாமினேட் செய்தார்கள்.

பிக்கியின் வழக்கமான போட்டுக்கொடுக்கும் வார்த்தைகளோடு யார் யார் நாமினேஷன் எனப் பட்டியல் வாசித்தார். ‘பாலாவின் நிழலிலேயே இருக்கிறார்’ ‘சிரித்துகிட்டே வீழ்த்துகிறார்’ இந்த இரண்டும் யாருக்கு என எல்லோருக்குமே புரிந்தது. இறுதிப்பட்டியலில், ஷிவானி, ஆஜித், ஆரி, ரியோ, ஷனம், அனிதா, நிஷா ஆகியோர் இருந்தனர்.

என்னாது ரமேஷ் கேப்டனா… பாலா நாமினேஷனில் இல்லையா? – பிக்பாஸ் 57-ம் நாள்

பாலாவுக்கும் ரியோவுக்கும் தாங்கள் பட்டியலில் இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது. நம்மைச் சொல்லமாட்டார்கள் என அனிதா நினைத்திருக்கலாம். அதனால் அவர் பெயரைச் சொன்னதும் முகம் இறுக்கமானது.

‘என்னை நாமினேட் செய்ய வேற காரணமே இல்லையா?’ என ஷிவானி கேட்டுட்டே இருந்தார். ‘நிஜமாகவே அப்படி ஏதும் காரணம் இல்லை. ஏன்னா, நீங்கதான் வேற எதிலேயும் ஆர்வமாகச் செய்வதில்லையே?’ ஷிவானி திரும்பவும் ரம்யாவிடம், ‘நீங்க சிரிச்சிட்டு காயப்படுத்தறீங்கன்னு உங்க காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்யறாங்க… ஆனா, எனக்கு….”என பழைய பல்லவி பாடி, ஆடியன்ஸிடம் நல்ல பெயருக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தார். ‘அதான் ஷிவானி, மத்தவங்க கிட்ட் நீங்க சரியா பேசறது இல்லனு உங்களை பற்றிய காரணம்தான்’ என்று ரம்யா சொன்னது ஜெர்க் ஆனார். சம்யுக்தா மாதிரி சொன்ன கேட்டுட்டு ஆமா போடுங்க என்பதுபோல லுக் விட்டார்.

என்னாது ரமேஷ் கேப்டனா… பாலா நாமினேஷனில் இல்லையா? – பிக்பாஸ் 57-ம் நாள்

இன்னொரு பக்கம், தான் நாமினேட் ஆகாததைக் கொண்டாடிட்டு இருந்தார் ரியோ. ‘நீ பண்ணின தப்புக்கெல்லாம் ஜெயிலுக்கு அனுப்பினதே போதும்னு விட்டுட்டாங்களாம்’னு ரம்யா சொல்லிட்டு இருந்தாங்கனு சொல்லிட்டு இருந்தர் சோம். காலையில் காதலை வைத்து தன்னை ஓட்டியதால் இப்போ ரியோவை ஓட்டிக்கொண்டிருந்தார் சோம். கூடவே கேபி. அப்படியா… இப்படியா என்று இருந்த கேபி முழுமையாக அர்ச்சண்ட் அன் கோவில் சேர்ந்து விட்டார்.

விளம்பர தாரர் நிகழ்ச்சி ஒன்று. இரு அணிகளாகப் பிரிந்து ஓர் அணி மற்றோர் அணி மீது பந்தால் அடிக்க வேண்டும். அந்த விளம்பரம் எழுதிய அட்டையால் அதைத் தடுக்க வேண்டும். (என்னமா யோசிக்கிறாங்க…) ஜெயித்தது ரியோ அண்ட் டீம்.

என்னாது ரமேஷ் கேப்டனா… பாலா நாமினேஷனில் இல்லையா? – பிக்பாஸ் 57-ம் நாள்

தீபங்கள் ஏற்ற, அனிதா ’தீபங்கள் ஏற்றும் இது கார்த்திகை மாசம்’ பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். ஆனா, அதைக் கேட்கத்தான் அங்கு யாருமில்லை என்பதுபோல தெரிந்தது. வீட்டில் இருந்த பாடகர்களை எல்லாம் அனுப்பிட்டு இருக்கீங்க.

பாலா டீமில் சம்யுக்தா போன இடத்தை ரம்யா நிரப்புவார் என்பதுபோல தெரிகிறது. ஆனால், பாலாவுக்கே ரியோ மீது சாஃப்ட் காரனர் வந்திவிட்டதுபோல இருந்தது.

வழக்கமாக பின்கதை சுருக்கம் சொல்லும் பிக்கி, சமீப நாட்களாக அதற்கு லீவு விட்டிருந்தார். நேற்றும் லீவு முடிந்து சார்ஜ் எடுக்கல. சுபம்.