முதல்வர் நிதிஷ் குமார் உள்பட…. பீகார் அமைச்சர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மீது கிரிமினல் வழக்குகள்….

முதல்வர் நிதிஷ் குமார் உள்பட….  பீகார் அமைச்சர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மீது கிரிமினல் வழக்குகள்….

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் உள்பட அம்மாநில அமைச்சர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அவர்கள் தங்களது வேட்புமனுவில் தெரிவித்து உள்ளனர்.

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. கடந்த திங்கட்கிழமையன்று நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் கூட்டணியை சேர்ந்த 13 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

முதல்வர் நிதிஷ் குமார் உள்பட….  பீகார் அமைச்சர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மீது கிரிமினல் வழக்குகள்….
நிதிஷ் குமார்

புதிதாக உருவாக்கப்பட்ட பீகார் அமைச்சரவை தற்போது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமைகள் சங்கத்தின் (ஏ.டி.ஆர்.) கண்காணிப்பின்கீழ் வந்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில், நிதிஷ் குமார் உள்பட 8 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அதிலும் 6 அமைச்சர்கள் மீது மிகவும் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

முதல்வர் நிதிஷ் குமார் உள்பட….  பீகார் அமைச்சர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மீது கிரிமினல் வழக்குகள்….
ஜனநாயக சீர்ததிருத்தங்களுக்கான சங்கம்

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டியிட தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். கடைசியாக அமைச்சரவையிலும் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.டி.ஆர். அறிக்கையின்படி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது கொலை, கொலை முயற்சி போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பீகார் துணை முதல்வர்கள் தர்கிஷோர் மற்றும் ரேணு தேவி மீதும் கிரிமினல் குற்ற்சசாட்டுக்கள் உள்ளன.