‘கடலில் மிதந்து வந்த 56 கிலோ கஞ்சா’ போலீசாரிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

‘கடலில் மிதந்து வந்த 56 கிலோ கஞ்சா’ போலீசாரிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

புதுக்கோட்டை அருகே கடலில் மிதந்து வந்த 56 கிலோவை கைப்பற்றி மீனவர்கள், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

‘கடலில் மிதந்து வந்த 56 கிலோ கஞ்சா’ போலீசாரிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

கடற்கரை பகுதியான புதுக்குடி கிராம மீனவர் பாலமுருகன் சக மீனவர்களுடன், படகில் நேற்று மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, கடலில் சற்று தூரத்தில் சணல் சாக்கு மூட்டை ஒன்று மிதந்து வந்துள்ளது. அதனைக் கண்டு சந்தேகம் அடைந்த பாலமுருகன், உடனே கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும், அந்த மூட்டையை கடலில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார்.

‘கடலில் மிதந்து வந்த 56 கிலோ கஞ்சா’ போலீசாரிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், அந்த மூட்டையை திறந்து பார்த்த போது அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது. இதே போல, அண்மையில் ஆரியசாமி என்பவர் மீன் பிடிக்க சென்ற போதும், கடலில் மிதந்து வந்த மூட்டையில் 14 பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு இடங்களில் மீட்கப்பட்ட கஞ்சாவின் எடை மொத்தம் 56 கிலோ இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போதை பொருள் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் அளித்த போலீசார், கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுகிறதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.