இந்த ஆண்டு 5600 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு கவுன்சலிங்! – மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

 

இந்த ஆண்டு 5600 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு கவுன்சலிங்! – மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

இந்த ஆண்டு 4600 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. நீட் தேர்வு தற்போதைய சூழ்நிலையில் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சீட்டை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டு 5600 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு கவுன்சலிங்! – மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
இந்த நிலையில் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு டி.வி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “இந்த ஆண்டு தமிழகத்தில் 5600 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். தமிழகத்தில் தற்போது 25 மருத்துவக் கல்லூரிகளில் 3600 சீட் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களை வழங்கும். கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆக மொத்தம் இந்த ஆண்டு 5600 எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை நடத்த உள்ளோம்.
தற்போது புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகள் செயல்படத் தொடங்கும்போது ஒரு கல்லூரிக்கு 150 வீதம் கூடுதலாக 1650 இடங்கள் நமக்கு கிடைக்கும்” என்றார்.