560 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வு நடத்த சம்மதம்- யூஜிசி

 

560 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வு நடத்த சம்மதம்- யூஜிசி

560 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக யூஜிசி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மாணவர்களிடமும் எழுந்துள்ளது. ஆனால், அதற்கு மாறாக இவ்விஷயத்தில் மத்திய உயர்கல்வித்துறையின் நிலைப்பாடு முன்னுக்குப்பின் முரணாக இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இருப்பினும், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது.

560 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வு நடத்த சம்மதம்- யூஜிசி

இதற்காக, பருவத் தேர்வுகள் நடத்துவது குறித்து யூஜிசி பல்கலைக்கழங்களிடம் கருத்து கேட்டது. அதற்கு, 755 பல்கலைக்கழகங்கள் பதிலளித்துள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது. அதில், 560 பல்கலைக்கழங்கள் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. ஏற்கனவே 194 பல்கலைக்கழங்கள் தேர்வை நடத்தி முடித்த நிலையில், 366 பல்கலைக்கழங்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக யுஜிசியிடம் தெரிவித்துள்ளன.