56% சதவீத மாணவர்கள் உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் !

 

56% சதவீத மாணவர்கள் உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் !

தேசிய அளவில் மாணவர்களின் உடல்நிலை குறித்து ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது.

தேசிய அளவில் மாணவர்களின் உடல்நிலை குறித்து ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வில், பள்ளிகளில் பயிலும் மாணவிகளை விட, மாணவர்களே சிறந்த உடல்நிலையை பெற்றுள்ளனர் என்றும் 49% மாணவர்கள் உயரதிற்கு ஏற்ற எடை கொண்டுள்ளனர் என்றும் மாணவிகள் 2% சதவீதம் குறைவாக 46% மட்டுமே உயரதிற்கு ஏற்ற எடை கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், சென்னையில் பயிலும் 56% மாணவர்களுக்கு உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

மேலும், தேசிய அளவிலான இந்த ஆய்வில், அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் சிறந்த உடல்எடை பெற்றுள்ளதாகவும், 47% தனியார் பள்ளி மாணவர்கள் சிறந்த உடல் எடையை பெற்றுள்ளதாகவும் 35% அரசு பள்ளி மாணவர்கள் சிறந்த உடல்எடையை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் எடை கூடுவதற்கு முறையான உணவு முறை இன்மையும், போதிய உடற்பயிற்சி செய்யாததும் காரணம் என்று கூறப்படுகிறது.