அந்த 55 நாட்கள்: நடுநடுங்க வைக்கும் நடுக்கடல் அனுபவங்கள்! கண்ணீருடன்பகிரும் மீனவர்கள்!

 

அந்த 55 நாட்கள்: நடுநடுங்க வைக்கும் நடுக்கடல் அனுபவங்கள்! கண்ணீருடன்பகிரும் மீனவர்கள்!

கொண்டு போன உணவும் தண்ணீரும் தீர்ந்து போய்விட்டதால் மீன் பிடித்து அதை மட்டுமே உண்டு காற்றடிக்கும் திசையெல்லாம் போய்கொண்டிருந்த படகில் 55 நாட்கள் 8 மீனவர்கள் நடுக்கடலில் அல்லாடிய சம்பவம் நடுநடுங்க வைக்கிறது. உயிர் பிழைத்து வந்துவிட்டாலும் அந்த 55 நாட்கள் திக்திக் திக் அனுபவ அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை.

சென்னை காசிமேட்டில் இருந்து கடந்த ஜூலை மாதம் 23ஆம்தேதி அன்று9 மீனவர்கள் கடலுக்குள் விசைப்படகில் மீன் பிடிக்கச்சென்றனர். ஜூலை 30ஆம் தேதி இவர்கள் கரை திரும்ப வேண்டும். ஆனால் கரை திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சி படகில் இருந்த ஜிபிஎஸ் கருவியின் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் கடலோர படையினரும் செய்வதறியாது தவித்தனர்.
இதையடுத்து, தமிழக மீன்வளத்துறை அவர்களை மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.

அந்த 55 நாட்கள்: நடுநடுங்க வைக்கும் நடுக்கடல் அனுபவங்கள்! கண்ணீருடன்பகிரும் மீனவர்கள்!

55 நாட்களுக்கு பிறகு மீயான்மர் கடற்படையினரால் 8 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 75 நாட்களுக்கு விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.

9 மீனவர்களில் 8 பேர் மட்டுமே திரும்பியுள்ளனர். இன்னும் ஒரு மீனவர் எங்கே? என்று எழும் கேள்விக்கு நடுக்கடலில் சிக்கித்தவித்த 55 நாட்கள்சம்பவம் பற்றி சொல்லி நடுநடுங்க வைத்திருக்கிறார்கள் கரை சேர்ந்த காசிமேடு மீனவர்கள்.

காசிமேட்டில் இருந்து கடலுக்குள் போன 5வது நாளிலேயே படகில் பழுது ஏற்பட்டிருக்கிறது. அந்த பழுதை சரி செய்ய முடியாமல் போகவே, காற்றடிக்கும் திசையில் படகு சென்றிருக்கிறது. அப்போது ஒரு மீனவர் உயிரிழந்திருக்கிறார்.

கொண்டு சென்ற உணவும், தண்ணீரும் 15 நாளில் தீர்ந்துவிட்டதால், அதன் பின்னர் சிறிய வலையை வைத்து மீன் பிடித்து அதை மட்டுமே சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்.

அந்த 55 நாட்கள்: நடுநடுங்க வைக்கும் நடுக்கடல் அனுபவங்கள்! கண்ணீருடன்பகிரும் மீனவர்கள்!


ஒரு நாள் அவர்களின் படகு அருகே இலங்கை மீனவர்களின் படகு வந்திருக்கிறது. அவர்கள் வந்த படகு சிறிய படகாக இருந்ததால், இந்த விசைப்படகினை இழுத்துச்செல்ல முடியவில்லை. கரைக்கு சென்று வேறு பெரிய படகினை அனுப்பி வைப்பதாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் சொல்லி இவர்களைத் தேடி படகு வந்ததோ இல்லையோ தெரியவில்லை. அதற்குள் காற்றடித்து இப்படகினை எங்கேயோ இழுத்துச்சென்றூவிட்டது.

55 நாட்களுக்கு பின்னர் மியான்மர் கடற்படையினரின் கண்களில் சிக்கி, காப்பாற்றப்பட்டனர். கொரோனா ஊரடங்கில் விமான சேவை ரத்தாகி இருந்ததால், விமான சேவை தொடங்கியதும் அவர்கள் டெல்லி வழியாக சென்னை க்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.

அந்த நடுக்கடலில் தத்தளித்த அனுபவங்களை தங்கள் உறவினர்களிடம் சொல்லி வருகின்றார்கள். அந்த 55 நாட்கள் திக்திக் சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள இன்னும் 6 மாசமாகும் என்று சொல்கிறார்கள் கண்ணீருடன்.