யானையை தீ வைத்து கொன்ற விவகாரம்; 55 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைப்பு

 

யானையை தீ வைத்து கொன்ற விவகாரம்; 55 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைப்பு

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இன்றி இயங்கிவந்த 55 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளன. யானையை தீ வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

யானையை தீ வைத்து கொன்ற விவகாரம்; 55 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைப்பு

காடுகளை அழித்து தனியார் சொகுதி விடுதிகள் அதிக அளவில் கட்டப்பட்டு விட்டன. இதனால் யானைகள் உள்ளிட்டகாட்டு வாழ் விலங்கினங்கள் இருப்பிடத்திற்கும், உணவுக்கும் அல்லாடும் நிலைமை இருந்து வருகிறது.

உணவு தேடி ஊருக்குள் வரும் நிலைமை ஏற்படும்போதுதான் மனித – விலங்குகள் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.

யானையை தீ வைத்து கொன்ற விவகாரம்; 55 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைப்பு

அப்படித்தான் முதுமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட மாவனல்லா, மசினகுடி, பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் அனுமதியின்றி 55க்கும் மேற்பட்ட தனியரர் சொகுசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

மாவனல்லா சொகுதி விடுதி வளாகத்திற்கு நுழைந்த யானையை விரட்ட, டயரை கொளுத்தி யானையின் மேல் தூக்கி வீசிவிட்டனர். இதில், யானையின் காது மற்றும் முதுகு பகுதி எரிந்தது. தீப்பற்றி எரிந்ததும் பிளிறியபடி யானை ஓடியது. இதனால் ஏற்பட்ட தீக்காயத்தினால் உடலில் இருந்து 40 லிட்டர் ரத்தம் வெளியேறி யானையால் நடக்க முடியாமல் போனது. வனத்துறையினர் சிகிச்சையளிக்க வாகனத்தில் ஏற்றிகொண்டு போகும் வழியிலேயே யானை உயிரிழந்தது.

யானையை தீ வைத்து கொன்ற விவகாரம்; 55 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைப்பு

இதன் பின்னர் தீவைத்து கொளுத்தப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.

தொடர்ந்து யானைகள் பலியாகிவரும் நிலையில், தீவைத்து கொளுத்தும் அளவுக்கு சென்றுவிட்டதால் கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து 55 சொகுசு விடுதிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளன என்பது தெரியவந்தது. இதையடுத்து மசினக்குடி ஊராட்சி மன்றத்தின் மூலம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு, அதன் பின்னர் 55 சொகுசு விடுதிகளூக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.