கிசான் மோசடி: ஈரோட்டில் முதற்கட்டமாக 550 போலி கணக்குகள் முடக்கம்!

 

கிசான் மோசடி: ஈரோட்டில் முதற்கட்டமாக 550 போலி கணக்குகள் முடக்கம்!

பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் காலாண்டுக்கு ஒருமுறை 2000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்திற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் துறை வருவாய்த்துறை மூலம் தகுதியானவர்கள் கணக்கெடுக்கப்பட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு வந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திட்டத்தில் சேர விண்ணப்பித்திருந்தனர். பின்னர் வருவாய் துறை வேளாண் துறை அதிகாரிகள் இணைந்து விண்ணப்பங்கள் மீது ஆய்வு செய்ததில் 85 ஆயிரம் விவசாயிகள் இணைக்கப்பட்டனர்.

கிசான் மோசடி: ஈரோட்டில் முதற்கட்டமாக 550 போலி கணக்குகள் முடக்கம்!

இந்நிலையில் தமிழகத்தில் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்கள் சேர்த்து மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் மற்றும் பயனாளிகள் விவரங்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இதில் முதல் கட்டமாக போலி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், ‘’ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டத்தில் சேர்க்க பட்டவர்களின் விண்ணப்பம் பயனாளிகள் விபரம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 550 கணக்குகள் போலியாக துவங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுஅந்தக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கிசான் மோசடி: ஈரோட்டில் முதற்கட்டமாக 550 போலி கணக்குகள் முடக்கம்!

மோசடி தொடர்பாக வங்கி கணக்கில் இருந்து 11 லட்சம் ரூபாயை கையகப்படுத்தி உள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் குறைந்த அளவில்தான் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் திட்டம் துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் வரும் விண்ணப்பங்களை வருவாய் துறை வேளாண் துறை அதிகாரிகளால் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டனர். திட்டத்தின் கடைசி நாட்களில் வெளி இடங்களில் உள்ள கணினி மையங்கள் மூலம் போலி பயனாளிகள் செயற்பட்டுள்ளனர். தற்போது கண்டறியப்பட்டுள்ள 550 நபர்கள் இந்த திட்டத்தில் சேர எவ்வித தகுதியும் இல்லாதவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நிலம் இருக்கும் அவர்கள் வெளியூரில் வசித்து வருபவர் அல்லது அரசுப் பணியில் இருப்பார் என்பது போன்ற விதிமுறைகளுக்கு மாறாக இணைந்தவர்களாக உள்ளனர்.
இதனால் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மோசடி தொடர்பாக முழு அளவில் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 7000 விண்ணப்பங்களில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனென்றால் இந்த 7000 விண்ணப்பங்கள் தான் கணினி மையம் மற்றும் இ சேவை மையங்கள் மூலம் அதாவது இணை இயக்குனரின் பாஸ்வேர்டு கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.