நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்.. கோடிக் கணக்கில் பணம் பறிமுதல்!

 

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்.. கோடிக் கணக்கில் பணம் பறிமுதல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் பொருட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்காகவே 250 அதிகாரிகள் கொண்ட சிறப்பு படை தமிழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்கிறது. அவர்களுடன் 400 வருமான வரித்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனை செய்கிறார்கள்.

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்.. கோடிக் கணக்கில் பணம் பறிமுதல்!

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் இதுவரை ரூ.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பணம் வைத்திருப்பவர்களை மட்டுமே கடந்த தேர்தல் வரையில் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். ஆனால், இப்போது கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக சோதனை நடைபெறுகிறது. இது குறித்து தகவல்களை தினமும் கடிதத்தின் வாயிலாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்.. கோடிக் கணக்கில் பணம் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடப்பது ஒன்றும் புதிதில்லை. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடாவால் தேர்தல் ரத்தானது. 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ரத்தானது என்பது நினைவு கூரத்தக்கது.