சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை… இதுவரை 55% பேர் பாதிப்பு!

சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை… இதுவரை 55% பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவின் தீவிரத்திலிருந்தே இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என இரண்டு புதிய தொற்றுகள் ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை… இதுவரை 55% பேர் பாதிப்பு!

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “கொரோனா நோயாளிகளுக்கும் அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு வருகிறது. நாட்டின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 5,424 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பதிவாகியுள்ளது. இதில் 4,556 பேர் கொரோனா நோயாளிகளாகவும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களாகவும் இருக்கின்றனர். பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 55 பேர் சர்க்கரை நோயாளிகளாவர்” என்றார்.

சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை… இதுவரை 55% பேர் பாதிப்பு!

மிகவும் அரிதான பூஞ்சை நோய் கொரோனாவைப் போல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியிருக்கிறார். இந்த நோயானது நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவானவர்களையும், சர்க்கரை நோயாளிகளையும் மிக எளிதாகவே தாக்குகிறது. மரணத்தின் விளிம்பு வரை செல்லும் கொரோனா நோயாளிகளுக்கு அதிகப்படியான ஸ்டீராய்டு கொடுப்பதால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைகிறது.

சர்க்கரை நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை… இதுவரை 55% பேர் பாதிப்பு!

இதனால் தான் கொரோனாவிலிருந்து மீண்டவர்களையும் மிகச் சாதாரணமாக பூஞ்சை நோய் பாதிக்கிறது. சுற்றுச்சூழலில் இருக்கும் பூஞ்சைகள் தான் இம்மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவதால் நாம் இருக்கும் இடத்தைச் சுகாதாரமாக வைத்துக்கொண்டாலே போதுமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.