55 இன்ச் 4k திரை கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி விற்பனை இந்தியாவில் தொடங்கியது

 

55 இன்ச் 4k திரை கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி விற்பனை இந்தியாவில் தொடங்கியது

55 இன்ச் 4k திரை கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்கியது.

டெல்லி: 55 இன்ச் 4k திரை கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்கியது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. பிளாஷ் சேல் விற்பனை முறையில் இன்று ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை நடந்தது. ஆனால், சில நிமிடங்களில் அனைத்து டிவிக்களும் விற்றுத் தீர்ந்தன. மீண்டும் எந்த தேதியில் ஃபிளிப்கார்ட் தளத்தில் இந்த டிவி மாடலை வாங்கலாம் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது 55 இன்ச் 4k திரை கொண்ட டிவி மாடலாகும். மேலும் ஜெ.பி.எல் ஆடியோ தொழில்நுட்பம் இந்த டிவியில் இடம்பெற்றுள்ளது. இதில் பியூர்எக்ஸ் குவாட்கோர் பிராசசர், இன்டெலிஜென்ட் டிம்மிங் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளது.

TTN

டால்பி விஷன் மற்றும் ஹெச்.டி.ஆர் அம்சங்களையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். கிளியர்வியூ தொழில்நுட்பம் மற்றும் கிளியர்சவுண்ட் தொழில்நுட்பம் இந்த டிவியில் உள்ளதால் இதன் விஷுவல் மற்றும் ஆடியோ தரம் மிகச் சிறப்பாக இருக்கும். கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட், யூடியூப் மற்றும் நெட்பிளிக்ஸ் பட்டன்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டு வாரண்டி கொண்ட இந்த டிவி மாடலுக்கு கூடுதலாக மூன்றாண்டுகள் வாரண்டியை ரூ.2,999 செலுத்தி பெறலாம். மேலும், ஹெச்.எஸ்.பி.சி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு இந்த டிவியை வாங்கும்பட்சத்தில் 10 சதவீதம் உடனடி சலுகையாக பெற முடியும்.