54 ஆண்டுகளுக்குப்பின் திமுக கைப்பற்றிய தொகுதி

 

54 ஆண்டுகளுக்குப்பின் திமுக கைப்பற்றிய தொகுதி

திமுக 54 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியிருக்கும் தொகுதி என்பதால் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி சிறந்த கவனத்திற்கு வந்திருக்கிறது.

54 ஆண்டுகளுக்குப்பின் திமுக கைப்பற்றிய தொகுதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பேராவூரணி தொகுதி 1967ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பர் கிருஷ்ணமூர்த்தி திமுக வேட்பாளராக களமிறங்கி 35 ஆயிரத்து 505 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அதன் பின்னர் 54 ஆண்டுகள் கழித்து 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணமூர்த்தியின் மருமகன் அசோக்குமார் திமுக வேட்பாளராக களமிறங்கி 23 ஆயிரத்து 503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இத்தனை ஆண்டுகள் பேராவூரணி தொகுதியில் திமுக வராததற்கு காரணம், 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அடுத்து வந்த தேர்தல்களில் எல்லாம் இத்தொகுதியை திமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கி வந்தது. அதனால் 54 ஆண்டுகளாக இத்தொகுதியில் திமுக போட்டியிடவில்லை. 54 ஆண்டுகளுக்குப் பின் திமுக வெற்றி பெற்றுள்ளதால் அத்தொகுதியிலுள்ள திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மாமனாருக்கு பின் மருமகனே சென்டிமென்டாக வெற்றி பெற்றிருப்பதாலும் அப்பகுதியினர் பரபரப்பாக பேசி வருகின்றனர்.