ஒரே நேரத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்! காரணம் இதுதானாம்?

 

ஒரே நேரத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்! காரணம் இதுதானாம்?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு கடந்த வாரம் சென்னையில் முகாமிட்டு ஆய்வு நடத்தினர். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமை தேர்தல் அதிகாரி, டிஜிபி, அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் தேர்தல் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்கு பின் சில முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய சுனில் அரோரா தமிழக அரசுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்! காரணம் இதுதானாம்?

இந்த சூழலில் தமிழக அரசு 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுநாள்வரை இவ்வளவு அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்தது கிடையாது. ஆனால் தேர்தல் நெருங்குவதால் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.சென்னை, திருநெல்வேலி, கோவை, சேலம், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.