வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவிருந்த 54 பேருக்கு கொரோனா!

 

வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவிருந்த 54 பேருக்கு கொரோனா!

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்பில் கலந்துகொள்ளவிருக்கும் பூத் முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஆகியோர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் அல்லது தங்களுக்கு கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவிருந்த 54 பேருக்கு கொரோனா!

அதேபோல தேர்தல் ஆணைய அதிகாரிகளும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். நாளை வாக்குகள் எண்னவிருப்பதால் புதுக்கோட்டையில் இன்று அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டனர். அதில் 2 வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், காவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் என 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 61 முகவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.