54 விமானங்கள் ரத்து! உலுக்கியெடுக்கும் ‘தாபா’ புயல்!

 

54 விமானங்கள் ரத்து! உலுக்கியெடுக்கும் ‘தாபா’ புயல்!

தமிழகத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயலின் பாதிப்பில் இருந்து இன்று வரையில் பல கிராமங்களிலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அதை விட சக்தி வாய்ந்த ‘தாபா’ புயலால் ஜப்பான் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். மிகக் கடுமையான வெப்பமண்டல புயல் கடந்த ஞாயிறன்று ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்றது.

தமிழகத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயலின் பாதிப்பில் இருந்து இன்று வரையில் பல கிராமங்களிலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அதை விட சக்தி வாய்ந்த ‘தாபா’ புயலால் ஜப்பான் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். மிகக் கடுமையான வெப்பமண்டல புயல் கடந்த ஞாயிறன்று ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்றது. இந்த தாபா புயலினால், தொடர்ந்து கனமழையும், பலத்த காற்றும் ஜப்பானில் வீசி வருகிறது. 

japan

தற்போது இந்த கடுமையான வெப்பமண்டல புயல், குறைந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது. ஜப்பானில் பெரும்பாலான கட்டிடங்கள், மரத்தினால் கட்டப்பட்டவை என்பதினால், இந்த ‘தாபா’ புயல் ஜப்பான் நாட்டில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில், நேற்று வலிமையை இழந்த தாபா புயல், தற்போது ஜப்பானின் மேற்கு கடற்கரையில் மணிக்கு சுமார் 65 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தாபா புயலினால், ஜப்பானில் சுமார் 54 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.