Home க்ரைம் 54 வயது ஆணுடன் 23 வயது பெண்ணுக்கு தகாத உறவு... ஆபாச படத்தை காட்டி மிரட்டியதால் கழுத்தறுத்து கொலை!

54 வயது ஆணுடன் 23 வயது பெண்ணுக்கு தகாத உறவு… ஆபாச படத்தை காட்டி மிரட்டியதால் கழுத்தறுத்து கொலை!

கொலைசெய்யப்பட்டவர் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த அம்மன் சேகர் என்பது தெரியவந்தது.

புதுவண்ணாரப்பேட்டை கிராஸ்ரோடு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு அவ்வழியே சென்றவர்கள் தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காகச்  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். விசாரணையில்  கொலைசெய்யப்பட்டவர் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த அம்மன் சேகர் என்பது தெரியவந்தது.

ttn

இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் பலதிடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 54 வயதான சேகருக்கு, 23 வயது இளம்பெண் ஒருவருடன் 5 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது. அந்த பெண்ணை சேகர் ஆபாசமாகி படமெடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். அந்த பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்க அவரின் பெற்றோர் முடிவெடுத்த நிலையில் ஆபாச படத்தை காட்டி மிரட்டியதாகத் தெரிகிறது. 

ttn

இந்நிலையில் நேற்று சேகர் அந்த பெண்ணை சென்னை அடையாறில் சந்தித்துள்ளார்.  அப்போது அந்த பெண் சேகரிடம்  பரிசு தருவதாக கூறி கண்ணை மூடச்சொல்லியுள்ளார். அப்போது சேகரின் கண்ணில் ஃபெவிக்விக் பசையை பூசிவிட்டு, அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இதனிடையே போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

அமித் ஷா, ஜே.பி. நட்டா பிரச்சாரம் செய்தும் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக!

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது....

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ – புதிதாக எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 96,08,211 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24...

மின்சாரத்தை ஆஃப் செய்யாத அலட்சியம்; மின் ஊழியர் இருவர் பரிதாப பலி!

பணியின் போது மின்சாரம் தாக்கி மின்சார ஊழியர் மற்றும் அவரின் உதவியாளர் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘நீங்க வெளியே போகலாம்’ பிக்பாஸே கடுப்பான தருணம் – பிக்பாஸ் 61-ம் நாள்

’உங்களுக்கு என்ன கொடுத்தாலும் இப்படியே செய்தால் நான் எப்படியா கண்டண்ட் எடுக்கிறதுனு பிக்பாஸ் சாட்டையை எடுக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை’ என்று 60-நாள் எப்பிசோட் பற்றிய கட்டுரையில்தான் எழுதியிருந்தேன். உடனே...
Do NOT follow this link or you will be banned from the site!