Home சினிமா ’பிக்பாஸ் வீட்டில் உருவானது மூன்றாவது அணி! –ஆனா…’ பிக்பாஸ் 53-54-ம் நாள்

’பிக்பாஸ் வீட்டில் உருவானது மூன்றாவது அணி! –ஆனா…’ பிக்பாஸ் 53-54-ம் நாள்

புயல், மழை காரணமாக போட்டியாளர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர் என்று செய்திகள் முன்பே வந்தன. ஆனால், அதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் செய்தித் தொடர்பாளர் மறுத்து கூறியிருந்தார். ஆனால், நேற்றைய எப்பிசோட்டில் போட்டியாளர்கள் அனைவரையும் வேறோர் இடத்துக்கு அழைத்துச்சென்று தங்க வைத்ததைக் காட்டினார்கள். இந்த சாதாரண செய்தி அதுவும் போட்டியாளர்கள் பாதுகாப்பு தொடர்பான செய்தியையும் நீங்கள் நிகழ்ச்சியில்தான் காட்டணும் என நினைப்பீர்களா…

நிகழ்ச்சியில் நடப்பதற்கும் நிகழ்ச்சியைப் பற்றிய செய்திக்கும் வேறுபாடு உணருங்கள். வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அசாதாரண சூழலில் வீட்டுக்குள் இருக்கும் மனிதர்கள் பற்றிய தகவலை சரியான நேரத்தில் சரியான தகவலை வெளியே சொல்வது முக்கியம் இல்லையா? போட்டியாளார்களின் குடும்பத்திற்கு சொல்லிவிட்டேன் எனச் சொல்லலாம். குடும்பத்திற்கு தெரியாமல், போட்டியாளார்களில் ஒருவரை வேறு யாரேனும் காதலித்து அவர்களுக்கு இது தெரியாமல் போனால்? சரியான அணுகுமுறை இல்லை பிக்பாஸ்.

53-ம் நாள் பிக்பாஸ்

போன் டாஸ்க் என்பதால், கர்ணா படத்தில் வரும் ’டெலிபோன் அடிக்குது… டெலிபோன் அடிக்குது’ பாட்டை ஒலிக்க விட்டார்கள். இதுக்கு எப்படி டான்ஸ் ஆடறதுன்னு சிலருக்கு குழப்பம். கையைக் காலை ஆட்டி ஒருவழியாகச் சமாளித்தார்கள்.

அனிதாவுக்கு போன் செய்தார் நிஷா. ‘நிகழ்ச்சி ஆரம்பித்தில் என்கூட நெருக்கமா இருந்தீங்க… ஏன் விலகிட்டீங்க’னு இயல்பாக ஆரம்பிச்சார் நிஷா. ‘நீங்க என்ன குறை சொன்னீங்க’அதான் விலகிட்டேன்னு சாதாரணமாகப் போனது. ‘சரியான நேரத்தில் அறிவுரை சொல்லும் அப்பாவின் குணத்தை ரியோவிடம் பார்த்தால் அவன்கூட தம்பியா பழகுகிறேன். அவன் சொல்லிக்கொடுத்தும் விளையாடல’னு தம் கருத்தைச் சொல்லிட்டு போனை வைத்தார்.

’வேறு ஏதாவது விளக்கம் வேணுமா?’னு அனிதா கேட்டதுக்கு ‘ரெண்டு வெளக்குமாத்து அடிதான் வேணும்’னு நகைச்சுவையா (!) சொல்லிட்டு வெளியே வந்தார். 2 ஸ்டார் அனிதாவுக்கு கிடைத்தது.

ஷனமிடந்த ‘நான் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளேன்’ போர்டு நிஷாவுக்கு மாறியது. முதன்நாள் நடந்த விவாதத்தினால சரியாகவே பேசவேமுடியலன்னு வருத்தப்படுவதாக அந்தப் பஞ்சாயத்துக்கு உயிர் கொடுக்க ஆசைப்பட, ரியோ முன்னெச்சரிக்கையாக, அதை பற்றி நிறைய பேசி டயர்டாகிட்டேனு எஸ்கேப்பாகினார்.  

ஆரி போன் செய்தது ஷிவானிக்கு. ‘ஞ்ஞாயி’னு போட்டு ஷிவானியை பேச வைத்தார் ஆரி. ஆனா, ‘உங்க குரல் இனிமையா இருக்கு’னு சொன்னதெல்லாம் ரொம்ப ஓவர். ‘பாலாவோடு உங்க ரிலேஷன்ஷிப் லவ்வா… அன்பா?’எனக் கேட்டார் ஆரி. அவர் கோபப்பட்டு போன் கட் பண்ணுவார் என நினைத்திருக்கலாம். ஆனால், இந்தக் கேள்வியை எதிர்பார்த்தவர் போல ‘எங்களுக்கு குள்ள அன்பான நட்பு’என பதில் சொல்லி முடிக்க, ஷிவானிக்கு 4 ஸ்டார் கிடைத்தது.

அப்போதான் பிக்கி கரகர குரலில் நிவர் புயலால் உங்களை வேறொரு இடத்துக்கு அழைச்சிட்டு போறோம்னு சொல்லி கூட்டிட்டு போய் அடுத்த நாள் காலை கொண்டு வந்துவிட்டார்.

54-ம் நாள் காலை

எந்த சீசனுக்கும் கிடைக்காத வாய்ப்பாக, ஒருநாள் இரவு வெளியே தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கு. உள்ளே வந்தவர்கள் மழை பெய்ததைப் பார்த்ததும் ரம்யா, ஷனம் உள்ளிட்ட சிலர் மழை டான்ஸ் ஆடினர்.

ஷனம், அனிதாவும் பர்மிஷன் கேட்டு தூங்கினார்கள். அதைப் பார்த்து பாலா, உதவி கேப்டன் வழியாக கேப்டனிடம் பர்மிஷன் கேட்டு தூங்கினார். அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் தூங்க ஷனம் பர்மிஷன் கேட்க, ‘அசிங்க அசிங்கமாகக் கேட்பேன்… ஏற்கெனவே ஒரு மணிநேரம் தூங்கியாச்சு’னு ரியோ கேஷூவலாகச் சொன்னதை பிடித்துக்கொண்டார்.

ஷனம் நினைத்தால் அதை விட்டிருக்கலாம். சண்டை வேணுமா… வேணாமா என்பதை அவர் கையில்தான் வைத்திருக்கிறார். எல்லோரிடமும் நன்றாகப் பழகுகிறார். கேஷூவலாக சில வார்த்தைகள் சொல்லத்தான் செய்வார்கள். அதைப் பிடித்துக்கொண்டு சண்டை வளர்க்கிறார். இப்போது அந்த லிஸ்ட்டில் அனிதாவும்.

நிவர் புயலால் கால் செண்டர் டாஸ்க் அடுத்த வாரம் தொடருமாம். லக்ஸரி பட்ஜெட் முழுமையாக கிடைக்குது என குஷி படுத்தினார் பிக்கி.

முழு ஈடுபாட்டுடன் இந்த வாரம் இருந்தவர்கள் யார் யார் என கேட்கப்பட்டது. அதில் அர்ச்சனா குழு ரமேஷைக் காப்பாற்ற நினைக்க, பாலா டீம் ரியோ தூக்க நினைத்தது. இறுதியாக, பாலா, ரம்யா, ரமேஷ் என முடிவானது.

அர்ச்சனா, பாலா இரு டீம்கள் இருந்த நிலையில் உதிரிகளின் அணிகளாக ஆரி, ஷனம், அனிதா டீம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை பெயர்களைச் சொல்லும்போதே தெரிந்தது.  ஷனம் ஆரி பெயரையும், ஆரி ஷனம் பெயரைச் சொன்னார்கள். இதற்கு யாரும் தலைவர் இல்லை. ஆனால், ஒரு குழு. தேவையெனில், ஒன்று சேர்வார்கள் இல்லையெனில் விலகி விடுவார்கள். இது ஒரு பின்நவினத்துவ குழு. அதாவது அதிகாரம் ஓர் ஆளிடம் குவியாத குழு.

சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர்கள் பட்டியல் போடும்போதும், ரியோவைக் குறி வைக்க பாலா அண்ட் உதிரி டீம் முடிவெடுத்தது நன்கு தெரிந்தது. அதைத் தடுக்க அர்ச்சனா அண்ட் கோவிடம் ஒரு ஒற்றுமையோ அல்லது முன் திட்டமிடலோ இல்லை என்பதால் ரியோ ஜெயிலுக்குப் போனார்.

ஆனால், ரியோ சொல்லாத ஒரு வார்த்தையைச் சொல்லி அதற்காக நாமினேஷன் செய்யறேனு சொன்னார் ஷிவானி. ‘அப்படி நான் சொல்லல’னு ரியோ சொன்னதும் ‘சரி, நான் உங்களை நாமினேட் பண்றேன்’னு சொல்லிட்டு போய் உட்கார்ந்தார். பின்னே, பாலா உங்களைச் சொல்லிட்டார். நானும் சொல்றேனு உண்மையைச் சொல்ல முடியுமா?’ இது ஷிவானியின் மைண்ட் வாய்ஸ் (ஆக இருக்கலாம்).

இறுதியாக, ஆரி, ரியோ இருவரும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்கள். ஒரு கேப்டன் ஜெயிலுக்கு அனுப்பப்படுவது இப்போதுதான் போல. அதனால், உதவி கேப்டன் சார்ஜ் எடுத்துகிட்டு உற்சாகமாக பூட்டைத் திறந்து இருவரையும் உள்ளே அனுப்பினார்.

அப்பறம், விளம்பரத்தாரர் நிகழ்ச்சியாக சிலம்பம் கற்றுத்தரும் போட்டியை நடத்தினார் பிக்கி. நடுவர்கள் அர்ச்சனாவும்சோம்ஸூம் என்பதால் எப்படியும் பாலாவின் நேரடி நண்பர்கள் ஜெயிக்க முடியாது என்பது தெரிந்தது. அதேபோல அதில் ரம்யா – அனிதா ஜோடியே வென்றது.

சீக்கிரமே ரியோவையும் ஆரியையும் ஜெயிலிலிருந்து வெளியே அனுப்பினார் பிக்கி. ‘உங்களை எல்லாம் ரொம்ப நேரம் உள்ளே வைச்சிருந்தாங்க’னு ஷிவானி சீக்கிர விடுதலை பற்றி கவலைப்பட்டார்.

ஷிவானிக்கு ஒரு விஷயம் புரியல. பாலா இரண்டு வாரம் உள்ளே போவதற்கான வாய்ப்புகள் இருந்ததால், ஜெயில் பகுதியையே கேன்சல் செய்தவர் பிக்கி.  புயலே அடிச்சாலும் மத்தவங்கள ஜெயிலுக்கு அனுப்பினவரு. உங்கள விட, பிக்கிக்கு பாலாவை பிடிக்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பங்குச் சந்தைகளில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

நிதி நிலை முடிவுகள், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை இந்த வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள்...

கருணாஸ் யாத்திரை தடுத்து நிறுத்தம்… போலீசார் தம்மை கேவலப்படுத்துவதாக புகார்…

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாத்திரை சென்ற எம்எல்ஏ கருணாஸை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை தலைவர்...

“கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குங்கள்” – அதிமுகவுக்கு, பிரேமலதா வலியுறுத்தல்

கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டுமென அதிமுகவுக்கு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்லையொட்டி, அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி...

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி தான் வேட்பாளர்கள் பட்டியலை முதலில் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!