அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; அதிர்ச்சி தரும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

 

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; அதிர்ச்சி தரும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 535 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. டெல்டா கொரோனா வைரஸின் தாக்கம் மக்கள் மத்தியில் இன்னும் தொடருகிறது. இதனால், உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த மே மாதம் பாதிப்பு உச்சத்தில் இருந்த போது உயிரிழப்புகள் 4 ஆயிரத்துக்கு மேல் இருந்தது. பின்னர், பாதிப்பு நாளுக்கு நாள் குறைய உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; அதிர்ச்சி தரும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரே நாளில் 39,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாகவும் 535 பேர் உயிரிழந்ததாகவும் 4,08,212 பேர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,05,43,138 ஆக அதிகரித்துள்ளதாகவும் உயிரிழப்புகள் 4,20,551 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.