53,274 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சரை வீழ்த்திய சா.மு.நாசர்

 

53,274 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சரை வீழ்த்திய சா.மு.நாசர்

ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜனை திமுக வேட்பாளர் சா.மு. நாசர் 53,274 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

53,274 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சரை வீழ்த்திய சா.மு.நாசர்

தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் ஆவடி தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்கும் தொகுதியாக ஆவடி இருக்கிறது. ராணுவத்திற்கு பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலையும், ராணுவ வீரர்களுக்கான ஆடை தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மையம் இங்கு அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் அமையப்பற்றது ஆவடி.

பூந்தமல்லி தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த ஆவடி, தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்னர் 2011ல் புதிய தொகுதியாக ஆனது ஆவடி. 2011, 2016 இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.

53,274 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சரை வீழ்த்திய சா.மு.நாசர்

2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.அப்துல் ரஹீம் 1,10,102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.தமோதரன் 66,864 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜன் 1,08,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சா.மு.நாசர் 1,06,669 வாக்குகள் பெற்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக சார்பில் மீண்டும் க.பாண்டியராஜனும், திமுக சார்பில் மீண்டும் சா.மு.நாசரும் களமிறங்கினர். தேமுக சார்பில் என்.எம்.சங்கரும், மநீம சார்பில் வி.உதயகுமாரும், நாதக சார்பில் ஜி.விஜயலட்சுமியும் களத்தில் இருந்தனர்.

இத்தேர்தலில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டே சா.மு.நாசர் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் பாண்டியராஜனை திமுக வேட்பாளர் சா.மு. நாசர் 53,274 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.