“நாகையில் நடப்பாண்டு 53,000 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது”!

 

“நாகையில் நடப்பாண்டு 53,000 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது”!

நாகை:

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர், கில்லுகுடி, பட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பருவமழை தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதோடு, நெல் மூட்டைகளின் எடை மற்றும் தரம் குறித்து ஆய்வும் மேற்கொண்டார்.

“நாகையில் நடப்பாண்டு 53,000 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது”!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 53 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 30 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் ஓரிரு நாட்களில் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஒரு லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு கொள்முதல் செய்வதற்கு தேவையான சாக்குகள் மற்றும் சணல் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதாகவும், நாளை நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை பகுதியில் ஈரப்பதம் குறித்து மத்திய குழுஆய்வு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, நெல் கொள்முதல் நிலையங்களில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, இந்த ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.