Home சினிமா ஜெயிச்சு தோற்ற ரம்யா… நீள வசனம் ஆரி… விட்டுக்கொடுத்த கேபி! – பிக்பாஸ் 52-ம் நாள்

ஜெயிச்சு தோற்ற ரம்யா… நீள வசனம் ஆரி… விட்டுக்கொடுத்த கேபி! – பிக்பாஸ் 52-ம் நாள்

எப்பாவாச்சும் நல்ல கண்டண்ட் கிடைக்கும் ஒரு டாஸ்க்கைக் கொடுக்கிறார் பிக்பாஸ். அதுல இந்த கால் செண்டர் டாஸ்க்கும் ஒண்ணு. ஆனா, அதைப் பரபரன்னு கொடுக்கணும்னு நினைக்காம, சீரியல் கணக்கா இழுத்தடிக்க முடிவு பண்ணினா… குற்றாலத்துக்கே போனானும் பாத்ரூம் ஷவர்லதான் குளிப்பேன் அடம்பிடிக்கிற மாதிரி இருக்கு. அப்படித்தா நேற்றைய எப்பிசோட் இருந்துச்சு. ஆனாலும், சின்னச் சின்ன விஷயங்கள் கவனம் ஈர்த்துச்சு… அவை என்னன்னு கட்டுரையில பார்க்கலாம்.

பிக்பாஸ் 52-ம் நாள்

காலையில் ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிந்தது. ஆளாளுக்கு முந்தைய நாளில் பேசியதைப் பற்றி விதவிதமாகப்பேசிட்டு இருந்தார்கள். பெரிய சண்டையாக ஏதும் மாற வில்லை.

சீரியல் தொடர்ந்து பார்த்தீர்கள் எனில், அது ஒரு விஷயத்தை எப்போதும் ஃப்லோ செய்வார்கள். அதாவது ஒரு வாரத்தில் அந்த சீரியலில் என்ன நடந்தது என்பதை அன்றைக்கு எப்படியாவது எந்தக் கேரக்டர் மூலமாகவாது சொல்லிவிட வைத்துவிடுவார்கள். அது ஓர் உத்தி. அதுதான் நேற்றைய பிக்பாஸ் எப்பிசோட்டில் ஆரி பண்ணிட்டு இருந்தார்.

’ஒரு ஊர்ல பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்களாம்…. னு முந்தைய நாள் சண்டையை அங்கேயே இருந்த ரியோவுக்கு விளக்கிட்டு இருந்தார். நான் பார்த்த காட்சிகளை கதையா வேற கேட்கணுமா… கேப்டன் பொறுப்பு ரொம்ப கஷ்டமா இருக்கேன்னு நெளிஞ்சிட்டி இருந்தார்.

இன்னொரு பக்கம். பாலாவும் ஷனமும் இந்த விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருந்தாங்க. ‘என்ன ஷனம் தொடர்ந்து ரெண்டு வாரம் எவிக்‌ஷன் நாமினேஷன்ல இருக்கணும்போல’னு கிண்டலடிச்சிட்டு இருந்தார். ‘நாமினேட் பண்றதே நீங்கதானே’னு பதிலடி கொடுத்தார் ஷனம். ‘நீ தனியா கேம் ஆடற… அதனால உன்னை நான் சொல்லல’னு ஒரு விளக்கம் கொடுத்தார். வழக்கம்போல ஷனம் அதை நம்பல.

அடுப்பில் குழம்ப வெச்சிட்டு டிவி பார்த்திட்டே இருக்கையில், ஏதோ கருகுற வாடை வந்தபிறகு அடுப்படிக்கு ஓடுவோமே, அதேபோல பிக்பாஸ் எடிட்டர், ஆரியும் ரியோவும் பேசிட்டு இருந்தாங்களே.. விட்டுட்டு வந்துட்டோமேன்னு ஓடிப்பார்த்தால்… இப்பதான் ஆரி, ‘அங்கே ஒரு காக்கா வந்துச்சு’ இடத்துக்கே வந்துட்டு இருந்தார். ஒருவழியாக சம்யுக்தாவுடன் சண்டை கதையை ஆரி சொல்லி முடிஞ்சதும், ’நீங்க ரெண்டு பேரும் ஸாரி சொல்லி சண்டை முடிச்சிட்டீங்க. இனிமே அதை கண்டினியூ பண்ணாதீங்க’னு ரெடிமேட் தீர்ப்பை சொல்லிட்டு எஸ்கேப்பானார் ஆரி. ’ஏண்டா… நான் அவ்வளவு சொன்னேன். நீ வெறுமனே ஊத்தாப்பம்னு சொல்லிட்டேன்னு கேட்கிற வடிவேலு மாதிரி பரிதாபமாக நின்றார் ஆரி.

கேபிக்கு போன் செய்தார் சோம்சேகர்.  நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க பல் அழகா இருக்கு. சிரிக்கும்போது உங்க மூக்கு ஏன் பறக்குது… ஏன் நாய்க்குட்டியை விட்டுட்டு ஆட வந்த….’னு மொக்கை போட்டுட்ட் இருந்தாரு. கடைசியா, போனை வெச்சிடுங்கனு சொன்னதும் ‘ வெற்றி பெற வாழ்த்துகள்ன்னு சொல்லிட்டு போனை வைத்தார் கேபி. ஆனா, சோம்ஸ் தன் புஜகர சாமார்த்தியத்தால் கேபியை போனை வைக்க வைத்தார் என கொண்டாடிக்கொண்டிருந்தனர் அர்ச்சனா அண்ட் கோ. அதை கேபி தன் ஊசியால் குத்தி உடைத்தார்.

இந்த விளையாட்டில் ஒரு ஓட்டை இருக்கிறது. பஸ்ஸர் அடிக்கும்வரை போனை வைக்கா விட்டால், போன் செய்பவர் அவுட் என்பதுபோல, பஸ்ஸருக்கு முன் வைத்தால் போன் எடுப்பவர் அவுட் என்றிருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அப்படி இருந்தால் கேபி போனை வைத்திருக்க மாட்டார்.

ஷனம் – பாலா – அனிதா மூவர் கூட்டணியில் கேபி – சோம் உரையாடல் பற்றி பேச்சு வந்தது. ‘கேபி தெரிந்தேதான் போனை வைச்சேன் சொல்றா… அவங்க குள்ளே விட்டுக்கொடுத்து ஆடறாங்க.. நான் சொன்ன குரூப்பிஸம் இதுதான்’னு பாலா அணத்திட்டு இருந்தார். கேபி மேல நேத்திலிருந்து ஒரு காண்டு வந்துடுச்சு பாலாவுக்கு. அதை எங்கே எப்போ வேணாலும் வெடிக்கலாம். இப்படி பேசிட்டு இருந்தப்ப ‘ஐ நோ’னு அடிக்கடி அனிதா சொன்னதால ஷனம் – அனிதாவுக்கும் சண்டை… ஜாலியாகச் சிரித்தார் பாலா. கோபிச்சிட்டு எழுந்துபோன அனிதா திரும்ப வந்து ஸாரி சொன்னார். ஆஹா… ஷனமிடம் ஸாரி கேட்கிற அளவுக்கு மெச்சூராகிட்டு வாராங்களா?’

பாத்ரூம்கிட்ட ஷிவானியிடம் பேச்சு கொடுத்தார் பாலா. ‘என்ன கோபம்?’ என வழக்கமான கேள்வியோடு ஆரம்பித்தார். ‘காலையிலேருந்து நீங்க பிஸி. நானும் விட்டுட்டேன்’னு ரொம்ப வழக்கமான பதிலைச் சொல்ல, அதுக்கு விளக்கம் கொடுக்க முயன்ற பாலாவிடம் சீறினார். ஸாரி சொல்லி நகர்ந்தார் பாலா. ஏதோ வேற விஷயம் நடந்திருக்கு. இல்ல… முந்தைய நாளில் ஷிவானியின் அன்பை 90 சதவிகிதம்தான் நம்பறேன்னு சொன்னது மனசில் உறுத்துதான்னு புரியல. ஆனா, எப்படியும் கொஞ்ச நேரத்துல போய் ஷிவானியே பேசிடுவார் என்பதுதான் இதுக்கு முந்தைய எப்பிசோட் காட்சிகள் வழியே நாம் கணிப்பது.

இன்னொரு பக்கம், அர்ச்சனா – நிஷா சாப்பாடு பத்தலனு பேசிட்டு இருந்தாங்க. என்ன பிக்பாஸ் வந்தவங்களுக்கு ஒழுங்கா சாப்பாடுகூட போட மாட்டீங்களா?

ரமேஷூக்கு போன் செய்தார் ரம்யா. தான் மீண்டும் குழந்தை டாக்டர் என்பதை நிருபித்தார் ரம்யா. ரொம்ப நார்மலா பேச்சை ஆரம்பித்து, அர்ச்சனா, நிஷா, ரியோ என ஒவ்வொருவரையும் நாமினேட் செய்ய காரணங்களைக் கேட்டார் ரம்யா. இதில் பார்த்தால் ரெண்டு சாமார்த்தியங்கள் இருக்கு. ஒண்ணு, கேள்வியில் பெரிய விஷமத்தனம் தெரியாது. ரெண்டாவது, அந்தப் பதிலில் வரும் ஊமைக்குத்துக்கும் எனக்கு சம்பந்தம் கிடையாதுன்னு ஒதுங்கிடலாம். ரமேஷ் திணறித்தான் போனார். அதுவும் நிஷாவை வெளியேற்ற நிறைய காரணங்கள் கேட்டதும், சொல்ல முடியாமல் தவித்தார். ஏன்னா, ரமேஷை ராஜா வீட்டு கன்னுக்குட்டியாகப் பார்த்துகிறது நிஷாதான். ஆனாலும் ஒரு வழியாக சமாளிச்சார்.

இதை டிவியில பார்த்துட்டு இருந்த ரியோ, ரம்யா மீது கோபமாகிக் கொண்டிருந்தார். ஆனால், ரமேஷ் சமாளித்ததும் நிம்மதியானார்கள். ஆனபோதும் ரம்யா எப்படியாவது போனை வெச்சிடுங்களேன் எனச் சொன்னதும் மனுஷன் பொட்டிப்பாம்பாக அடங்கி வெச்சிட்டார். அதனால ரமேஷ்க்கு 5 ஸ்டார் கொடுத்தார் ரம்யா.

ரமேஷ்க்கு அதிக ஸ்டார் வந்ததும் ரம்யா மீது வெறுப்பு அன்பாக மாறி ரம்யாவைக் கொண்டாடியது அர்ச்சனா அண்ட் கோ. ஆனா, பிக்கி ஒரு டிவிஸ்ட் வைத்தார். அவரா கட் பண்ணாம, நீங்க சொல்லித்தான் கட் பண்ணியதால் நீங்க நாமினேட் செய்யப்படுறீங்கனு சொன்னார். இதேதானே சோமசேகரும் பண்ணினார். அவரை விட்டுட்டீங்க பிக்கி. ஏன்… அர்ச்சனா அண்ட் கோ ஆள் என்பதாலா… அப்பன்னா… அர்ச்சனா அண்ட் கோவில் நீங்களும் மெம்பரா பிக்கி?

சீரியன் நாயகன் எனும் கேரக்டருக்குள் நுழைந்தார் ஆரி. ஷனம் – அனிதாவிடம் பேசிட்டு இருந்தபோது, முந்தைய நாள் சம்யுக்தாவுக்காக பாலா வக்காலத்து வாங்கியதை நீண்ட ஸ்டோரியாகச் சொல்லிட்டு இருந்தார். முடியல பாஸ்… ஏன் இப்படி படுத்துறீங்க?

பாலாவும் பதிலுக்குப் பதில் பேசி, நீ ஹீரோ… நான் வில்லன்… இல்லல்ல நான் ஹீரோ.. நீ வில்லன்னு சீரியஸாக சண்டை போட்டு காமெடி இல்லல்ல கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துல ஷனமுக்கும் ஆரிக்குமான சண்டையாக அது மாற…. ஆஹாஹான்னு பாலா ரசிச்சிட்டு இருந்தார். ஏன்யா… பஞ்சாயத்து பண்ண வந்தா என்னையே குற்றவாளியாக்கிடுவீங்களான்னு ஷனம் அதிரடி பாய்ச்சல் நிகழ்த்தினார்.

பொதுவாக பிக்பாஸ் வீட்டுக்குள்ள, இரண்டு பேருக்கு இடையில பஞ்சாயத்து செய்ய வரும் நபர்கள் செய்யும் ஒரே வேலை. அதன் வழியாக தங்கல் பஞ்சாயத்துகளை தீர்த்துக்கொள்வதுதான். அனிதாவிடம் பல முறை ஆரி அப்படிச் செய்துள்ளார். அனிதா மற்றவர்களிடம் பல முறை அப்படிச் செய்துள்ளார். அந்த வித்தையை ஷனம் இப்போ பழகிட்டு வாரார். வாழ்த்துகள் மேடம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்!

மதுரையில் டெங்கு காய்ச்சல் அதிகமாகி வரும் நிலையில் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த...

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும்...

“கோவையில் தேர்தல் பரப்புரை” – கோனியம்மன் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்!

தேர்தல் பரப்புரைக்கு முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் சாமி தரிசனம் செய்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி...

ராமதாசின் சீட் பேரம்.. திமுக சீனியர் எம்.எல்.ஏ. ஆவேசம்

வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இர ஒதுக்கீடு கோரி பாமக இரண்டு மாதங்களாக ஐந்து கட்ட போராட்டம் நடத்தி வருகிறது. வரும் 29ம் தேதி இறுதிக்கட்ட போராட்டத்தினை நடத்த ஏற்பாடுகள் நடந்து...
Do NOT follow this link or you will be banned from the site!