ஒரே நாளில் 52 ஆயிரம் நோய் தொற்று – பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா

 

ஒரே நாளில் 52 ஆயிரம் நோய் தொற்று – பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரத்து 888 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 59 ஆயிரத்து 093 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 19 லட்சத்து 05 ஆயிரத்து 975 நபர்கள்.

சில நாடுகளில் கொரோனா தொற்று சற்று தணிந்து வருகிறது என்றாலும், பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பிரான்ஸ்.

ஒரே நாளில் 52 ஆயிரம் நோய் தொற்று – பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா

செப்டம்பட் 3-ம் தேதி பிரான்ஸில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 3 லட்சம். சரியாக ஒரு மாதம் கழித்து அக்டோபர் 3-ம் தேதி பார்க்கையில் அது இரு மடங்காகி 6 லட்சத்தைத் தொட்டது. இன்னும் ஒரு மாதம் முடியாத நிலையில் 11.3 லட்சமாக அதிரடியாக உயர்ந்திருக்கிறது.

மார்ச் மாதத்தில் பிரான்ஸில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருந்தாலும், அந்நாடு கட்டுப்படுத்தியிருந்தது. ஆகஸ்ட் மாதம் வரை கட்டுக்குள் இருந்தது கொரோனா பரவல். ஆனால், ஆகஸ்ட் இறுதியிலிருந்து புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து விட்டது. நேற்று மட்டுமே புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 52,010.

ஒரே நாளில் 52 ஆயிரம் நோய் தொற்று – பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா

புதிய நோயாளிகளின் எண்ணிக்கை பிரான்ஸில் அதிகரித்தாலும் இறப்பு எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருப்பது ஆறுதலான செய்தி. ஆயினும் புதிய நோயாளிகள் அதிகரிப்பது நீடித்தால், இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது.

பிரான்ஸில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவின்மொத்த பாதிப்பு 11,38,507. இவர்களில் குணமடைந்தவர்கள் 1,10,322 பேர். இறந்தவர்கள் 34,761 பேர்.

தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் 9,93,424 பேர். அனைவரும் லேசான பாதிப்புடன் இருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.